Home
Mobile

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. IP69K ரேட்டிங்.. 8650எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் (Honor X70 Pro Max) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Honor X70 Pro Max Specifications): 6.79-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640 x 1200 பிக்சல்ஸ், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 என்ஹான்ஸ் எடிஷன் சிப்செட் (Snapdragon 6 Gen 4 Enhanced Edition chipset) உடன் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

MagicOS 10.0சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.

IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளன. டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Honor அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

8650எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

பர்ப்பிள், சன்பர்ஸ்ட் கோல்ட், பேம்பூ கிரீன் மற்றும் ஃபாண்டம் நைட் பிளாக் கலர்களில் இந்த போனை வாங்கலாம். சீனாவில் ஹானர் எக்ஸ்70 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 1,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.27,937)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor X70 Pro Max with 8650mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X