ஜூலை 15 உறுதி.. 8300mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்70 (Honor X70) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 15-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்70 அம்சங்கள் (Honor X70 specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 1.5கே டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640×1200 பிக்சல்ஸ், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 2.3ஜிகாஹெர்டஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (2.3GHz Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் வசதியுடன் ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor)வசதியும் இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளன.
மேஜிக்ஓஎஸ் 9.0(MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ஹானர் போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 193 கிராம் என்று கூறப்படுகிறது. ரெட், பிளாக், ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்,க்ளோனாஸ், பீடோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8300mAh பேட்டரியுடன் ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மர்ரட்போன் இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுகளுடன் உள்ளன.


Click it and Unblock the Notifications








