Home
Mobile

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. ரூ.16,760 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 80W + 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட ஒட்டுமொத்த மாடல்களையும் தூக்கி சாப்பிடும்படி 8300mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் எக்ஸ்70 5ஜி (HONOR X70 5G) வெளியாகி இருக்கிறது. இவ்வளவு பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொடுக்கிறது.

இந்தியாவில் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களுக்கு எப்போதும் மவுசு இருக்கிறது. இதனாலே, 5500mAh தொடங்கி 6000mAh மற்றும் 7300mAh என்று அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்கள் பட்ஜெட் விலையிலயே கிடைக்க தொடங்கிவிட்டன. இந்த மாடல்களையெல்லாம், தூக்கி சாப்பிடும்படி சீன மார்கெட்டில் ஹானர் எக்ஸ்70 5ஜி போன் வெளியாகி இருக்கிறது.

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. ரூ.16,760 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 80W!

அங்குதானே வெளியாகி இருக்கிறது. இந்தியாவுக்கு எப்படி கிடைக்கும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் எக்ஸ்9பி மற்றும் எக்ஸ்9சி போன்ற மாடல்கள் இந்தியாவில் வெளியாகி இருக்கின்றன. மேலும், புதிய மாடல்களை களமிறக்கவும் ஹானர் இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆகவே, இங்கும் எதிர்பார்க்கலாம்.

ஏனென்றால், இந்தியாவில் அதிக பேட்டரி மாடல்களின் விற்பனை சக்கைப்போடு போட்டு வரும்போது, அந்த மார்கெட்டை பிடிக்க இந்த 8300mAh மாடலானது பக்கா தேர்வாக இருக்கும். ஆகவே, அடுத்த சில மாதங்களில் இந்த மாடலை எதிர்பார்க்கலாம். சரி, இந்த ஹானர் எக்ஸ்70 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. ரூ.16,760 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 80W!

ஹானர் எக்ஸ்70 5ஜி விலை (HONOR X70 5G Price): இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.16,773ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.19,171ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.21,568ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.23,960ஆகவும் இருக்கிறது.

சின்னாபார் ரெட், பாம்பூ கிரீன், மூன் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய 4 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஜூலை 18ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட் வெளியீடு ஓரிரு மாதங்களில் இருக்கும். அதன் பிறகு இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். 8300mAh பேட்டரிக்கு அடுத்து என்னென்ன எதிர்பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்70 5ஜி அம்சங்கள் (HONOR X70 5G Specifications): இந்த ஹானர் போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதில் 512 ஜிபி வேரியண்ட்டில் மட்டும் கூடுதலாக 80W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 6.79 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த டிஸ்பிளேவில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமரா கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP69 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR X70 5G With 8300mAh Battery Launched Sale From July 18 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X