தூக்கி சாப்பிட்ட HONOR.. 8300mAh பேட்டரியோடு வருது X70 5ஜி.. OIS கேமரா.. ஜூலை 15-க்கு முன் லீக்கான பீச்சர்கள்!
சீனா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பேட்டரியுடன் ஹானர் எக்ஸ்70 5ஜி (HONOR X70 5G) போனானது வெளியாக இருக்கிறது. எப்போது வெளியாகும் என்ற தேதி உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களில் கேமரா, சிப்செட், டிஸ்பிளே போன்ற மொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. அதேபோல டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்களும் தெரிய வந்துள்ளன. இந்த ஹானர் எக்ஸ்70 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் 8300mAh பேட்டரி கொண்ட மாடலை ஹானர் நிறுவனம் களமிறக்க இருப்பதாக மார்கெட்டில் தகவல்கள் வெளியாகின. இதை உறுதி செய்யும் விதமாக அந்த நிறுவனம் ஆனது, ஜூலை 15ஆம் தேதி ஹானர் எக்ஸ்70 5ஜி போன் வெளியாகும் என்றும் அதில் 8300mAh பேட்டரி, 80W வயர்லெஸ் டூயல் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி) இடம்பெறும் என்று தெரிவித்தது.

அதே நேரத்தில் வெர்மில்லியன் ரெட் (Vermillion Red), பேம்பூ கிரீன் (Bamboo Green), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் பேண்டம் நைட் பிளாக் (Phantom Night Black) ஆகிய கலர்களிலும் இந்த ஹானர் எக்ஸ்70 5ஜி போன் வெளியாகும் என்பதையும் உறுதி செய்தது. இந்த பீச்சர்கள் மற்றும் தேதி விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், கேமரா, சிப்செட், ஓஎஸ் மற்றும் ரேம் வேரியண்ட்கள் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, இந்த போன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மாலிவான விலைக்கு வர இருப்பது தெரிகிறது. இதனால், சீனா மட்டுமல்லாமல், இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

ஹானர் எக்ஸ்70 5ஜி அம்சங்கள் (HONOR X70 5G Specifications): முன்பே சொன்னதை போல 8300mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி ஆகிய பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானவை. இதற்கு அடுத்து பார்க்கப்போகும் மற்ற பீச்சர்கள் அதிகாரப்பூர்வமானவை கிடையாது. கசிந்தவை மட்டுமே.
இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Octa Core 4nm Snapdragon 6 Gen 4) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஹானர் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களுடன் மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) பேக் செய்யப்பட இருக்கிறது.
12 ஜிபி ரேம் மற்றும் அதற்கு 128 ஜிபி மெமரி, 256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. பிளாட் டிசைனில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கும்படி 6.79 இன்ச் (2640 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வர இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்70 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், செகண்டரி கேமரா வர இருக்கிறது.
10 சைடுகளில் ஆன்டி-ஃபால் புரொடெக்சன் கிடைக்க இருக்கிறது. ஆகவே, இதை அதிக டியூரபிலிட்டி கொண்ட மாடலாக எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, இதன் விலை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கம்மியாகவே இருக்கும். ஆகவே, ரூ.25,000 ஆரம்ப விலையிலும் ரூ.30,000 பட்ஜெட் செக்மெண்ட்டிலும் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications








