Home
Mobile

Honor அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 5260mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் எக்ஸ்6டி (Honor X6d) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, 5260எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்6டி அம்சங்கள் (Honor X6d Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720+ ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Honor அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் 6300 எஸ்ஒசி சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5260எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் மிட்நைட் பிளாக் (Midnight Black), ஓசன் சியான் (Ocean Cyan)நிறங்களில் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ஆனால் தற்போது ஹானர் எக்ஸ்6டி ஸ்மார்ட்போன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய ஹானர் போனின் விலை AED 509 (இந்திய மதிப்பில் ரூ.12,600). குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஹானர் நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் பல அசத்தலான ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X6d with 5260mAh battery launched in UAE: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X