Home
Mobile

அறிமுகமானது புது Honor 5ஜி போன்.. 5260mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் எக்ஸ்6டி 5ஜி (Honor X6d 5G) ஸ்மார்ட்போனை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் எக்ஸ்6டி 5ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்6டி 5ஜி அம்சங்கள் (Honor X6d 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் 6300 எஸ்ஒசி சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமானது புது Honor 5ஜி போன்.. 5260mAh பேட்டரி.. எந்த மாடல்?

6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம்+ 128ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். அதேபோல் MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5260எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் மிட்நைட் பிளாக் (Midnight Black), ஓசன் சியான் (Ocean Cyan)நிறங்களில் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

தற்போது ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் மத்திய கிழக்கில் (Middle East) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை $150 (இந்திய மதிப்பில் ரூ.13,617) ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்6டி 5ஜி போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X6d 5G 5G with 50MP Camera launched in Middle East: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X