Home
Mobile

அடுத்த ஹானர் ஸ்மார்ட்போன் ரெடி.. 5100mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஐபி64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்6சி (Honor X6c) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த புதிய ஹானர் போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்6சி அம்சங்கள் (Honor X6c Specifications): 6.61-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1604 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஹானர் ஸ்மார்ட்போன் ரெடி.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா சிப்செட் (MediaTek's Helio G81 Ultra) வசதியுடன் ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மேஜிக் ஒஎஸ் 9.0 (Magic OS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா + QVGA சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவும் இந்த புதிய ஹானர் போனில் உள்ளது.

5100mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

குறிப்பாக 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் எக்ஸ்6சி ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, கம்மி பட்ஜெட்டில் இந்த புதிய ஹானர் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Source)

photo credit:ytechb.com

Best Mobiles in India

English summary
Honor X6c full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X