இப்படியா அட்டை காப்பி அடிப்பீங்க.. அச்சு அசலா iPhone-ஐ வெளியிடும் ஹானர்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
ஐபோன் போன்ற வடிவமைப்பு கொண்ட புது ஹானர் எக்ஸ்60ஐ (Honor X60i) போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். தற்போது இந்த போனின் அறிமுகம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்60ஐ போன்.
ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் ஐபோனை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்60ஐ அம்சங்கள் (Honor X60i Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ போன். மேலும் இதன் டிஸ்பிளே 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (Dimensity 6080) சிப்செட் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் மேஜிக்ஓஎஸ் 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஹானர் எக்ஸ்60ஐ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ரெயிட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
கிளவுட் ப்ளூ ( Cloud Blue),மூன் ஒயிட் (Moon White),கோரல் பர்பிள் (Coral Purple), பாண்டம் பிளாக் (Phantom Black), நிறங்களில் ஹானர் எக்ஸ்60ஐ போனை வாங்க முடியும். மேலும் இந்த புதிய போன் ரூ.19இ660 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 26-ம் தேதி சீனாவில் ஹானர் எக்ஸ்60ஐ போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








