மார்கெட் காலி.. ரூ.16,135 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 35W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக வெறும் ரூ.16,135 பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, 256 ஜிபி மெமரி, ஏஐ எலிமினேஷன் பீச்சருடன் 50 எம்பி மெயின் கேமரா, 10X டிஜிட்டல் ஜூமிங், 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஸ்மார்ட் கேப்சூல்ஸ் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் ஹானர் எக்ஸ்60ஐ (HONOR X60i) வெளியாகி இருக்கிறது. இந்த புதிய ஹானர் மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்60ஐ அம்சங்கள் (HONOR X60i Specifications): இந்த ஹானர் போனில் 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3240Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த், டிசிஐ-பி3 கலர் காமட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்60ஐ போனில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa-core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உள்ளது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
இந்த கேமராவில் ஏஐ எலிமினேஷன் பீச்சர் (AI Elimination Feature), 10X டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) மற்றும் 1080P வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. இந்த ஹானரில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மேஜிக்ஓஎஸ் 8.0 வருவதால் ஸ்மார்ட் கேப்சூல்ஸ் (Smart Capsules), ஹானர் ஹிஸ்டென் ஆடியோ (HONOR Histen Audio) வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டூயல்-மைக் நாய்ஸ் ரெடக்சன் (Dual-mic Noise Reduction) சப்போர்ட் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்60ஐ போனில் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. பேட்டரி உடன் 7.18 எம்எம் தடிமன், 172 கிராம் எடை உள்ளது.
IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,135ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.18,445ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 20,750 ஆக இருக்கிறது.
இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். இந்த ஹானர் போனில் கோரல் பர்பிள் (Coral Purple), கிளவுட் ப்ளூ (Cloud Blue), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் மேஜிக் நைட் பிளாக் (Magic Night Black) கலர்கள் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








