காத்திருப்பு ஓவர்.. 50MP கேமரா.. 35W சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் வருகிறது Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்60ஐ (Honor X60i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி கேமரா, மீடியாடெக் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவர உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்கள், விலை மற்றும் அறிமுக தேதி குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்60ஐ அம்சங்கள் (Honor X60i specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஹானர் போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2412 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (Dimensity 6080) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்60ஐ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் மேஜிக்ஓஎஸ் 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன் ஆனது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். மேலும் நைட் பிளாக் (Night Black), கிளவுட் வாட்டர் ப்ளூ (Cloud Water Blue), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் கோரல் பர்பிள் (Coral Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
அதேபோல் வரும் ஜூலை 26-ம் தேதி சீனாவில் இந்த ஹானர் எக்ஸ்60ஐ போன் அறிமகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரூ.19,643 விலையில் இந்த புதிய ஹானர் போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








