அதகளம் பண்ணும் ஹானர்.. 50MP கேமரா.. 35W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்60ஐ (Honor X60i) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் எக்ஸ்60ஐ போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்60ஐ அம்சங்கள் (Honor X60 Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கும் இந்த போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

கோரல் பர்பிள் (Coral Purple), கிளவுட் ப்ளூ ( Cloud Blue), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White) மற்றும் மேஜிக் நைட் பிளாக் (Magic Night Black)நிறங்களில் இந்த ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஐீ64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர ஏஐ அம்சங்களுடன் ஹானர் எக்ஸ்60ஐ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹானர் எக்ஸ்60ஐ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹானர் எக்ஸ்60ஐ போனின் ஆரம்ப விலை ரூ.16,157-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








