வெச்சி மிரட்டிட்டாப்ல.. ரூ.14000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. 35W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மரண வெயிட்டிங் மோடில் காத்திருக்கும்படி வெறும் ரூ.14,160 பட்ஜெட்டில் சாம்சங் சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் டிஸ்பிளே, 35W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங், 5800mAh பேட்டரி மற்றும் 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் ஹானர் எக்ஸ்60 (HONOR X60) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்60 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் எக்ஸ்60 அம்சங்கள் (HONOR X60 Specifications): இந்த ஹானர் போனில் 6.8 (2412 × 1080 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) வருகிறது. ஹோல்-பஞ்ச் டிசைன் (Hole-punch Design) கிடைக்கிறது.

சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom) உள்ளது. இதுபோக எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. கேமரா பீச்சர்களை பார்கையில், டைனாமிக் போட்டோஸ் (Dynamic Photos), மல்டி லென்ஸ் ரெக்கார்டிங் (Multi-lens Recording) கிடைக்கிறது.
மேலும், நைட் சீன் மோட் (Night Scene Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), வாய்ஸ் ஆக்டிவேடெட் போட்டோகிராபி (Voice-activated Photography), டைம்டு போட்டோகிராபி (Timed Photography) மற்றும் ஏஐ போட்டோகிராபி மாஸ்டர் (AI Photography Master) போன்ற கேமரா பீச்சர்களும் வருகின்றன. இந்த 108 எம்பி கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்60 போனின் பேட்டரி சிஸ்டம் பக்காவான பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது. 35W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Super Fast Charging) கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) பேஸ்டு ஆண்டார்ய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது.
பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 Ultra 6nm) சிப்செட் வருகிறது. இந்த ஹானர் போனில் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் கிடைக்க இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) இருக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) கிடைக்கிறது. மூன் ஷோடோ ஒயிட் (Moon Shadow White), சீ லேக் ப்ளூ (Sea Lake Blue) மற்றும் எலிகென்ட் பிளாக் (Elegant Black) கலர்கள் கிடைக்கிறது.
8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,160ஆகவும், 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.16,520ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.18,880ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.21,245ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. அக்டோபர் 25ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. சில வாரங்களில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








