மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.17,700 போதும்.. 108MP கேமரா.. 6600mAh பேட்டரி.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
மார்கெட் மிரளும்படியான பட்ஜெட்டில் சாம்சங் சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6600mAh பேட்டரி பீச்சர்கள் மட்டுமல்லாமல், 7.98 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடியுடன் ஹானர் எக்ஸ்60 ப்ரோ (HONOR X60 Pro) போன் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட்டில் பிரியர்களை தட்டித்தூக்கும் படியாக இருக்கும் இந்த ஹானர் போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை விவரங்கள் என்ன? விற்பனை எப்போது? உள்ளிட்ட விவரங்கள் இதோ
ஹானர் எக்ஸ்60 ப்ரோ அம்சங்கள் (HONOR X60 Pro Specifications): இந்த ப்ரோ போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆகவே, பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

ஹானரின் மேஜிக்ஓஸ் 8.0 (MagicOS 8.0) பேக் செய்துள்ளது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2700 x 1224 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த ஹானர் எக்ஸ்60 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடல்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆகவே, 4 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது.
இந்த ஹானர் எக்ஸ்60 ப்ரோ போனில் பேட்டரி சிஸ்டம் மிரளவிடுகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 6600mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி கிடைப்பதால், சாலிட் பேக்கப் கிடைக்கும். கேமிங் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 7.98 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது.
108 எம்பி மெயின் கேமரா இருக்கிறது. சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த ஹானர் எக்ஸ்60 ப்ரோ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. டூயல் சிம் சிலாட் இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,700ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,065ஆகவும் இருக்கிறது. அதேபோல, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,605ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,150ஆகவும் இருக்கிறது. சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.
அக்டோபர் 25ஆம் தேதி முதல் அங்கு விற்பனை தொடங்குகிறது. அதற்கு பிறகு மற்ற நாடுகளில் வெளியாகும். இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. ஸ்கை ப்ளூ (Sky Blue), பாசல்ட் கிரே (Basalt Gray), பர்னிங் ஆரஞ்ச் (Burning Orange), எலிகன்ட் பிளாக் (Elegant Black) கலர்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








