அக்.16-ல் வரும் புதிய Honor போன்.. 6600mAh பேட்டரி.. 108எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் வரும் அக்டோபர் 16-ம் தேதி ஹானர் எக்ஸ்60 (Honor X60) மற்றும் ஹானர் எக்ஸ்60 ப்ரோ (Honor X60 Pro) ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹானர் எக்ஸ்60 போனின் அம்சங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது ஹானர் எக்ஸ்60 ப்ரோ போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்60 ப்ரோ அம்சங்கள் (Honor X60 Pro Specifications): 6.7-இன்ச் கர்வ்டு எட்ஜ் அமோலெட் (curved-edge AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்60 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2700 x 1224 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் உடன் ஹானர் எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் இந்த போன் 108எம்பி ரியர் கேமரா உடன் வெளிவரும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ஹானர் எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் எக்ஸ்60 ப்ரோ போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இதில் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
6600mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த போனின் எடை 188 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் (black), பசால்ட் கிரே (Basalt Gray), பர்னிங் ஆரஞ்சு (Burning Orange), ஸ்கை ப்ளூ (Sky Blue) மற்றும் எலிகண்ட் பிளாக் (Elegant Black) நிறங்களில் ஹானர் எக்ஸ்60 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய ஹானர் போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். மேலும் ஏற்கனவே வெளியான ஹானர் எக்ஸ்60 அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்60 அம்சங்கள் (Honor X60 Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் (MediaTek Dimensity 7025 chipset),108எம்பி ரியர் கேமரா, 5800mAh பேட்டரி, 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 14 (Android 14), 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட ஹானர் எக்ஸ்60 போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








