Home
Mobile

அவ்ளோதானா? வெறும் ரூ.17,205 போதும்.. 12GB ரேம்.. 35W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 35W ரேபிட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா உள்ளிட்ட பீச்சர்களுடன் பிரீமியம் டிசைன் மற்றும் IP64 ரெசிஸ்டன்ட் உடன் ஹானர் எக்ஸ்60 பிளஸ் (Honor X60 Plus) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ஹானர் எக்ஸ்60 பிளஸ் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பட்ஜெட்டில் வெளியாகியும் மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்டிருப்பதால், ஹானர் பிரியர்களிடையே வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. ஏனென்றால், பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் பாண்டம் நைட் பிளாக் (Phantom Night Black), மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White), வொண்டர்லேண்ட் கிரீன் (Wonderland Green) கலர்களில் வெளியாகி இருக்கிறது.

அவ்ளோதானா? வெறும் ரூ.17,205 போதும்.. 12GB ரேம்.. 35W சார்ஜிங் போன்!

ஹானர் எக்ஸ்60 பிளஸ் அம்சங்கள் (Honor X60 Plus Specifications): இந்த ஹானர் மாடலில் 6.77 இன்ச் (720 x 1610 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. பட்ஜெட் மாடலென்பதால், எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பட்டையை கிளப்புகிறது.

மேஜிக் ஓஎஸ் (Magic OS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்60 பிளஸ் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 எஸ்ஓசி (Octa Core Snapdragon 4 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் இந்த போன் கிடைக்கும். அதேபோல 8 ஜிபி விர்ச்சுல் ரேம் சப்போர்ட் உள்ளது.

இந்த போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கொண்டிருக்கிறது.

இந்த ஹானர் எக்ஸ்60 பிளஸ் போனில் சிப்செட் பீச்சருக்கு அடுத்தபடியாக பட்டையை கிளப்பும் பேட்டரி பீச்சர்கள் வருகின்றன. 35W ரேபிட் ஃபாஸ்ட் சார்ஜிங் (Rapid Fast Charging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி கொண்டிருந்தும், இந்த ஹானர் மாடலானது, 8.24 எம்எம் தடிமன் மற்றும் 198 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது.

இந்த ஹானரில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,205ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,543ஆகவும் இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, ஹானர் 90, ஹானர் எக்ஸ்9பி போன்ற போன்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இருப்பினும், ஹானர் எக்ஸ்60பிளஸ் போன்ற பட்ஜெட் போன்களை இந்திய ஹானர் பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே, ரூ.20,000 பட்ஜெட் கொண்ட இந்த போனுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Honor X60 Plus With 12GB RAM, 6000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X