அக்டோபர் 16 உறுதி.. 108எம்பி கேமரா.. 5800mAh பேட்டரி.. வருகிறது புதிய Honor 5ஜி போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் அடுத்து ஹானர் எக்ஸ்60 (Honor X60) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் அக்டோபர் 16-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹானர் எக்ஸ்60 போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் எக்ஸ்60 அம்சங்கள் (Honor X60 Specifications): 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ஹானர் எக்ஸ்60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் (MediaTek Dimensity 7025 chipset) வசதியுடன் இந்த புதிய ஹானர் எக்ஸ்60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஹானர் எக்ஸ்60 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் மேஜிக்ஒஎஸ் 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
108எம்பி ரியர் கேமராவுடன் இந்த ஹானர் எக்ஸ்60 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனில் வைடு லென்ஸ் மற்றும் மேக்ரோ கேமரா குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதபோல் 8எம்பி செல்பி கேமரா உடன் ஹானர் எக்ஸ்60 போன் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.
அதேசமயம் 5800mAh பேட்டரி உடன் ஹானர் எக்ஸ்60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிடலாம்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) உடன் ஹானர் எக்ஸ்60 அறிமுகம் செய்யப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் டூயல் ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் எக்ஸ்60போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஹானர் எக்ஸ்60 ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹானர் போன்.


Click it and Unblock the Notifications








