பின்றானே இவன்.. வெறும் ரூ.20998 போதும்.. OIS கேமரா.. 6300mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
நம்ப முடியாத பட்ஜெட்டில் 6300mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஓஐஎஸ் சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஹானர் எக்ஸ்60 ஜிடி (HONOR X60 GT) போன் வெளியாகி இருக்கிறது. டிராப் & ஃபால் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும் இந்த ஹானர் எக்ஸ்60 ஜிடி போனின் முழு பீச்சர்களையும், விலை மற்றும் விற்பனை விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஹானர் மாடல்கள் களமிறங்க தொடங்கிவிட்டன. ஹானர் 90 மாடலில் தொடங்கி ஹானர் 200 ப்ரோ மாடல் வரையில் வெளியாகி இருக்கின்றன. இங்கு வெளியாகும் முன்பு சீன மார்கெட்டில் புதிய மாடல்கள் களமிறங்குவது வழக்கம். இப்போது, ஹானர் எக்ஸ்60 ஜிபி போனானது சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.

ஹானர் எக்ஸ்60 ஜிடி அம்சங்கள் (HONOR X60 GT Specifications): இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 5 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு மேஜிக் யுஐ 8.0 (Magic UI 8.0) கிடைக்கிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 (Octa Core Snapdragon 8+ Gen 1) சிப்செட் கிடைக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (2664 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போனில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட கேமரா கிடைக்கிறது.
ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ மேஜிக் போட்டோ ரீடச்சிங் (AI Magic Photo Retounching), ஏஐ இமேஜ் எக்ஸ்பான்ஷன் (AI Image Expansion), ஏஐ எலிமினேஷன் (AI Rlimination), ஏஐ ஃபேஸ் ரீஸ்டோர்ஷன் (AI Face Restoration) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்60 ஜிடி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. IP65 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், டிராப் & ஃபால் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.
அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் பிரியர்களுக்கு ஏற்றபடி 6300mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.7 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 193 கிராம் எடை இருக்கிறது. டைட்டானியம் சில்வர் (Titanium Silver), டைட்டானியம் ப்ளூ (Titanium Blue) கலர்கள் உள்ளது.
மேலும், பாண்டம் பிளாக் (Phantom Black) கலரும் கிடைக்கிறது. இந்த ஹானர் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,998ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,333ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,992ஆகவும் இருக்கிறது. இது சீனா யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையாகும்.


Click it and Unblock the Notifications