Home
Mobile

வேற லெவல் டிசைன்.. 108MP கேமரா.. 512GB மெமரி.. அறிமுகமானது புதிய Honor போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஹானர் எக்ஸ்9பி (HONOR X9B)எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம்.

இந்நிலையில் சத்தமின்றி ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் (Honor X50i Plus) எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். இந்த புதிய ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

108MP கேமரா.. 512GB மெமரி.. அறிமுகமானது புதிய Honor போன்.. எந்த மாடல்?

அதாவது ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் (2000 nits brightness), 3240ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (3240Hz PWM dimming) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 6080 சிப்செட் (Dimensity 6080 chipset) வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் மேஜிக் ஒஎஸ் (Magic OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்டபோன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும்சைடு பேஸிங் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்(Side Facing Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சர் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது.

108MP கேமரா.. 512GB மெமரி.. அறிமுகமானது புதிய Honor போன்.. எந்த மாடல்?

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ்ஸ்மார்ட்போனின் எடை 166 கிராம் ஆகும்.

பிங்க், பிளாக், க்ரீன், ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் இந்த ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய ஹானர் போனின் ஆரம்ப விலை 1,599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,200) ஆக உள்ளது. விரைவில் ஹானர் எக்ஸ்50ஐ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor x50i plus with 108MP camera launched: check price, specifications and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X