இமாலய டிஸ்பிளே! அமோலெட், ஓஎல்இடி, ஃபுல்எச்டிபிளஸ், கர்வ்ட் டிசைன் வேற! ஒரேவொரு போன்!
பிரம்மாண்ட டிஸ்பிளே அம்சங்களை கொண்ட போன்கள் மீது, அதீத ஆர்வம் கொண்ட ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வரப்பிரசாதம் போல வந்திருக்கிறது, ஹானர் எக்ஸ் 50 (Honor X50) ஸ்மார்ட்போன். ஃபுல்எச்டிபிளஸ், கர்வ்ட் டிசைன், அமோலெட் மற்றும் ஓஎல்இடி என்று ஒட்டுமொத்த ஹை-எண்ட் டிஸ்பிளே அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், அட்ரினோ 710 கிராபிக்ஸ் கார்டு, குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட், 5,800mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் என்று கூடுதல் அம்சங்களுடன் கேமிங் பிரியர்களை கவர்ந்து இழுக்கும் வகையிலும் உள்ளது. ஆனால், இந்த போன் மிட்-ரேன்ஞ் போன்களின் விலையைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வர உள்ளது.

ஏனென்றால், ஹானர் எக்ஸ் 40 போன் (Honor X40) ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியானது. ஆகவே, இந்த போன் ரூ.2000 முதல் 4000 வரையில் கூடுதலான விலைக்கு விற்பனைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நேரத்தில், இந்த ஹானர் எக்ஸ் 50 போனின் அம்சங்களை தெரிந்துகொள்வோம்.
ஹானர் எக்ஸ் 50 அம்சங்கள்: இந்த போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்ட போனாகும். இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அட்ரினோ 710 ஜியுபி (Adreno 710 GPU) கிராபிர்ஸ் கார்டு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு கேமிங் பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
அதுமட்டுமல்லாமல், நீண்ட பேக்கப்புக்காக 35W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் எக்ஸ் 50 போன் டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் உடன் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஸ் மற்றும் 16 ஜிபி ரேம் 512 ஜிபி ஸ்டோரேஜ் என்று 2 வேரியண்ட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சங்களை வைத்து பார்க்கும்போது, இந்த போன் மிட்-ரேன்ஞ் விலையில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அதைவிட குறைவான விலைக்கு கூட வெளியாகலாம். அதன்படி ரூ.30,000 பட்ஜெட்டில் விலை நிர்ணயிக்கப்படலாம்.
இந்த போன் ஜூலை 5ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அதன்பின் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








