இறங்கி அடிச்ச Honor.. 108MP கேமரா.. 256GB மெமரி.. 35W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனம் இந்தியாவில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் .
சத்தமின்றி சீனாவில் ஹானர் எக்ஸ்50 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். இந்த போன் விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஹானர் எக்ஸ்50 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்50 ப்ரோ அம்சங்கள் (Honor X50 Pro specifications): தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1) வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மேஜிக் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
6.78-இன்ச் கர்வ்ட் (curved) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் ஸ்கிரீன், 1920Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் வழங்கும்.
108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5800எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஹானர் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2,799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.33,642) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








