Home
Mobile

மெர்சல் காட்டும் ஹானர்.. 50MP கேமரா. 35W சார்ஜிங்.. 16GB ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சியோமி, சாம்சங், விவோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஹானர் நிறுவனம் அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம்.

அதாவது ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் ஹானர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. அதன்பின்பு தான் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மெர்சல் காட்டும் ஹானர்.. 16GB ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Honor X50 Pro 5G specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் சிப்செட் (Qualcomm Snapdragon 8+ SoC) வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். பின்பு 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் வசதியுடன் விற்பனைக்கு வரும் ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

6.81-இன்ச் 1.5கே கர்வ்ட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50எம்பி டூயல் ரியர் கேமரா வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மெர்சல் காட்டும் ஹானர்.. 16GB ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

5800எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவரும். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஹானர் எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X50 Pro 5G with 120Hz curved display will be launched soon: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X