Home
Mobile

வேற மாதிரி போன்! அல்ட்ரா கிளியர் டிஸ்பிளே! 108MB கேமரா, 12GB ரேம் வேற! ஆனால், பட்ஜெட் விலை!

ஹானர் (HONOR) நிறுவனத்தின் ஹானர் எக்ஸ் 50 (HONOR X50) போன் பட்ஜெட் விலையில், 108ஜிபி கேமரா, 12ஜி ரேம், 1920Hz பிடபுள்யூ டிம்மிங், அட்ரினோ 710 கிராபிக்ஸ் கார்டு என்று வேற மாதிரி அம்சங்களுடன் வந்திருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஹானர் நிறுவத்தின் போன்கள் கேமரா மற்றும் டிஸ்பிளேவுக்கு பெயர் பெற்றவை. சொல்லப்போனால், சாம்சங் போன்களுக்கு நிகரான டிஸ்பிளேவை கொண்டிருக்கும். ஆனால், பேட்டி நிறுவனங்கள் காரணமாக பல நாடுகளில் விற்பனையை நிறுத்திவிட்டது. ஆனால், இப்போது விட்ட இடத்தை பிடிக்க பிரம்மாண்ட டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சங்களுடன் கூடிய போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வேற மாதிரி போன்! 108MB கேமரா, 12GB ரேம் வேற! ஆனால், பட்ஜெட் விலை!

அந்த வரிசையில், கண்களே தோன்றுபோகும் அளவுக்கு அதீத கிளாரிட்டி கொண்ட டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், சாம்சங் சென்சாருடன் கூடிய கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி என்று பிரீமியம் போன் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஹானர் எக்ஸ் 50 போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய காத்திருக்கிறது.

ஹானர் எக்ஸ் 50 அம்சங்கள் (HONOR X50 Specifications): இந்த போன் 6.78 இன்ச் (2652*1200 பிக்சல்கள்) கர்வ்ட் (Curved) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில், 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 1920Hz பிடபுள்யூ டிம்மிங் (PWM Dimming) ஃபிரிகொன்சி வருகிறது.

1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1000Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் மேஜிக் யுஐ 7.1.1 (Magic UI 7.1.1) ஓஎஸ் உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

டூயல் நானோ சிம் கார்டு சப்போர்ட் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்50 போனின் கேமராவை பொறுத்தவரையில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. 35W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. டைப்-சி ஆடியோ ஜேக் மற்றும் சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த போன் சன்னி (Sunny), எலிகன்ட் பிளாக் (Elegant Black), பிரவுன் ப்ளூ (Brown Blue) மற்றும் பர்னிங் ஆரஞ்சு (Burning Orange) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,170ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. அதேபோல, 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.20,445ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.22,720 ஆகவும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விலை உறுதிபடுத்தப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வரும் ஜூலை 14ஆம் தேதி சீனாவில் வெளியாக இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR X50 Price Specifications With 120Hz Curved display, Snapdragon 6 Gen 1, 16GB RAM, 5800mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X