பட்டைய கிளப்ப போகும் ஹானர் போன்.. Snapdragon 888.. 256GB மெமரி.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் இந்நிறுவனம் பல அசத்தலான போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஹானர் எக்ஸ்50 ஜிடி (Honor X50 GT) எனும் போன் புளூடூத் SIG சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்திய சந்தை மற்றும் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ALP-AN00 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்50 ஜிடி போன். எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான ஹானர் எக்ஸ்50 ஜிடி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்50 ஜிடி அம்சங்கள்: 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் 2388 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் (Snapdragon 888 chipset) வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஹானர் எக்ஸ்50 ஜிடி போன் விற்பனைக்கு வரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயன்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் விரைவாக பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஹானர் போன் ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








