மிரள வைக்கும் ஹானர்.. 108MP கேமரா.. 35W சார்ஜிங்.. 16GB ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஹானர் எக்ஸ்50 ஜிடி எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். விரைவில் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 108எம்பி கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்50 ஜிடி அம்சங்கள் (Honor X50 GT specifications): 6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே (1.5K OLED 120Hz curved) வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் 2652 x 1200 பிக்சல்ஸ், 1920Hz ஹை - ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming), 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்நஸ், 1200 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 1000ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ள இந்த போனின் டிஸ்பிளே.
குறிப்பாக 3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் 4என்எம் சிப்செட் வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதனுடன் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108எம்பி Samsung HM6 sensor பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
Magic UI 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5500எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.26,165) ஆக உள்ளது. சிலவர் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








