Home
Mobile

மீண்டும் மீண்டுமா.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. புதிய போனை கொண்டுவரும் ஹானர்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் நிறுவனம் மீண்டும் புதிய புதிய போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டத் தொடங்கி உள்ளது. அதுவும் இப்போது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட போன்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது ஹானர் நிறுவனம் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். அதாவது ஹானர் எக்ஸ்50 ஜிடி (Honor X50 GT) எனும் ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்யும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. புதிய போனை கொண்டுவரும் ஹானர்..

ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 2388 x 1080 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இணையதளத்தில் கசிந்த தகவலின்படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் (Snapdragon 888 chipset) வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் சிறந்த வேகம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹானர் போன் வெளிவரும்.

ஆனாலும் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஹானர் எக்ஸ்50 ஜிடி போன் விற்பனைக்கு வரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமராவும் அடங்கும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி போன்.

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் மற்றும் தரமான ஆடியோ அம்சத்துடன் ஹானர் எக்ஸ்50 ஜிடி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்50 ஜிடி போன். மேலும் இந்த ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சஙகளுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ஹானர் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹானர் 90 (Honor 90) போன் ஆனது தற்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹானர் 90 போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்.

photo courtesy: gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor X50 GT could be launched soon: specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X