ரூ.8700க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? மொத்த போனையும் தூக்கி சாப்பிடும் புதிய Honor போன்!

|

Honor X5 ஸ்மார்ட்போனானது MediaTek Helio G25 SoC மற்றும் 5,000mAH பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த அம்சங்கள் ஸ்மார்ட்போனுக்கு பிரதானமாக தேவையோ அது அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்டு இருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.8700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவுகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அனைத்து நாடுகளிலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. அதன்படி ஹானர் நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை களமிறக்கி இருக்கிறது.

பிற நாடுகளில் எப்போது அறிமுகம்?

பிற நாடுகளில் எப்போது அறிமுகம்?

Honor நிறுவனம் மத்திய கிழக்கு சந்தைகளில் Honor X5 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒற்றை பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவலை ஹானர் உறுதி செய்யவில்லை.

Honor X5 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Honor X5 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Honor X5 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஜோர்டானில் JD 75 (தோராயமாக ரூ.8,700) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

3 வண்ண விருப்பங்களில் அறிமுகம்

Honor X5 ஆனது மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. அது Sunrise Orange, Ocean Blue மற்றும் Midnight Black ஆகும். ஒவ்வொரு பிராந்தியங்களிலும் இந்த ஸ்மார்ட்போனின் வண்ண விருப்பங்கள் மாறுபடுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஹானர் X5 சிறப்பம்சங்கள்

ஹானர் X5 சிறப்பம்சங்கள்

ஹானர் X5 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது டூயல் சிம் 4ஜி இணைப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஹானர் எக்ஸ்5 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 (Go பதிப்பு) மூலம் இயங்குகிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட்

Honor X5 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 720x1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 விகித ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 2ஜிபி ரேம் ஆதரவு இருக்கிறது.

8 எம்பி பிரதான கேமரா

8 எம்பி பிரதான கேமரா

Honor X5 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் இந்த ஒற்றை கேமரா மட்டும் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

டிஸ்ப்ளே இல் வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் உள்ள ஒற்றை கேமரா உடன் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவும் இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் ஆதரவுடன் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11, ஜிபிஎஸ், ஓடிஜி, ப்ளூடூத் v5.1, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் Micro USB போர்ட் ஆகியவைகள் இருக்கிறது.

இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் எடை 193 கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிற நாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவலை நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.

File Images

Best Mobiles in India

English summary
Honor X5 Smartphone Launched With 5000mAh Battery at Rs.8700: Is it worth to buy?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X