Home
Mobile

தாறுமாறு பட்ஜெட்.. ரூ.10,000 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மீண்டும் களமிறங்குவதற்கான பணியில் ஹானர் (HONOR) நிறுவனம் முழு வீச்சில் செயல்பட்டுவரும் வேளையில், அந்த நிறுவனத்தின் ஹானர் எக்ஸ்5 பிளஸ் (HONOR X5 Plus) போன் மலிவு விலை அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இந்தியாவில் பட்ஜெட் மற்றும் மலிவு விலையில் வெளியாகும் போன்களே அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மலிவு விலை போன்களை அறிமுகம் செய்வது அதிகரித்து விட்டது. இந்த போட்டியானது, ஸ்மார்ட்போன் மார்கெட்டை பிடிப்பதற்கான முயற்சி என்பதால், அந்த நிறுவனங்கள் லாபத்தை பார்க்காமல், நல்ல நல்ல அம்சங்களை கொடுக்க தொடங்கிவிட்டன.

ரூ.10,000 போதும்.. 50MP கேமரா.. 5200mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த வரிசையில் ஹானர் நிறுவனமும் இணையப்போவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஹானர் நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவிருப்பதை உறுதி செய்துள்ளது. அதைத்தொடர்ந்து ஹானர் 90 போனே முதலில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் சர்வதேச சந்தையில் மிகவும் மலிவான பட்ஜெட்டில் ஹானர் எக்ஸ்5 பிளஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்5 பிளஸ் (HONOR X5 Plus Specifications): இந்த போன் 6.56 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஃஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 பிபிஐ (269 PPI) பிக்சல் டென்சிட்டி வருகிறது. அதோடு டைனாமிக் டிம்மிங் டெக்னாலஜி (Dynamic Dimming Technology)கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹானர் போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்ட ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 (Octa-core MediaTek Helio G36) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 (IMG PowerVR GE8320) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில், எச்டிஆர், பனோரமா, ப்ரோ மோட், போர்ட்ராய்ட் மோட், 10x டிஜிட்டல் ஜூமிங், டைம்-லேப்ஸ் போன்ற பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

அதேபோல 5 எம்பி செல்பீ கேமராவிலும் போர்ட்ராய்ட் மோட், டைம்-லேப்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. இந்த ஹானர் போன் 4 ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. மேலும், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நல்ல பேக்கப் கொடுப்பதற்காக 5200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரிக்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார், டைப் - சி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் 5.2, 3.5 மிமீ ஹெட் போன் ஜாக், என்ஃஎப்சி, வைபை 802.11 உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.

இந்த போன் சியான் லேக் (Cyan Lake) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த தகவல்களை ஹானர் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த அம்சங்களை வைத்து பார்க்கும்போது, ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் ஹானர் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் புதிய மாடல்களை வெளியிட இருக்கிறது. இந்த வேளையில், இந்த பட்ஜெட் விலை போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மலிவாக இருப்பதால், இந்திய மார்கெட்டில் வெளியானால் எளிதாக வரவேற்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR X5 Plus With 50MP Camera, 4GB RAM, 5200mAh Battery, MediaTek Helio G36 Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X