50எம்பி கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலை.. அறிமுகமானது புது ஹானர் போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஹானர் 90 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஹானர் நிறுவனம். அதாவது தற்போது சீனாவில் ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் இந்த புதிய ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் (HONOR X40 GT Racing Edition) அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.81-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி (TFT LCD ) டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2388×1080 பிக்சல்ஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் (Octa Core Snapdragon 888 5nm) சிப்செட் உடன் அட்ரினோ 660 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Magic UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என்கிற இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் இந்த புதிய போன் டைப்-சி ஆடியோ, HONOR Histen 7.0 சவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (66W fast charging) ஆதரவு கொண்ட 4800 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனில் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. ஃபேன்டஸி பிளாக், ரேசிங் பிளாக் மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஹானர் எக்ஸ்40 ஜிடி ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை yuan 1799 (இந்திய மதிப்பில் ரூ.20,755) ஆக உள்ளது. குறிப்பாக அருமையான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதரிபார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








