7.09-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 11-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஹானர் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் அனைத்து
அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 2,399 (இந்திய மதிப்பில் ரூ.28,100) ஆக
உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.31,600) ஆகஉள்ளது. நீலம், மேஜிக் நைட் பிளாக் மற்றும் டைட்டானியம் சில்வர் போன்ற நிறங்களில் இந்த சாதனம அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 7.09-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாகும். அதேபோல் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. மேலும் Magic UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாகஇருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர கைரேகை சென்சார், கைரோஸ்கோப் சென்சார் என பல சென்சார் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

புளூடூத் வி5.1, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்30 மேக்ஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications