Home
Mobile

அசத்தலான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விலைக்கு தகுந்த அம்சங்கள் இந்த
சாதனத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அசத்தலான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் உட்பட வசதிகளுக்கு பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சிப்செட் ஸ்மார்ட்போனை வேகமாக
இயக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் Dimensity சிப்செட் வசதி தான் அதிகம் இடம்பெறுகிறது. மேலும் ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனும் இந்த Dimensity சிப்செட் வசதியை கொண்டு வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மேலும் ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அசத்தலான சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எமபி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 5ஜி, வைஃபை, 4ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Honor X20 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X