ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹானர் எக்ஸ்10 மேக்ஸ்
ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் 7.09-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2280 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் சாதனத்தில் மீடியாடெக்6873 மற்றும் Dimensity 800எஸ்ஒசி ஆதரவு உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு10 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள்ள அடக்கம்.

வைஃபை 802.11 ஏசி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 5, பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் விலை
இந்திய மதிப்பில்...
6ஜிபி மெமரி மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் விலை ரூ.22,230-ஆக உள்ளது.
8ஜிபி மெமரி மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் விலை ரூ.26,465-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications