Home
Mobile

மே 20: அட்டகாசமான ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் வரும் மேல 20-ம் தேதி தனது புதிய ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நான்கு ரியர் கேமராக்கள், தரமான மென்பொருள் அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதனத்தின்

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.63-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

40எம்பி பிரைமரி லென்ஸ்

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 40எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவும் அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி/8ஜிபி

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.

ஆண்ட்ராய்டு 10

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோகோர் கிரிண் 820எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4200எம்ஏஎச்

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை 802.11 பி / ஜி / என், புளூ

5ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ், 3.5 மிமீ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor X10 5G Launch Set for May 20, MIIT and TENAA Listings Tips Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X