ஹானர் 7எக்ஸ், 8 ப்ரோ, 9 லைட் மீது அதிரடி தள்ளுபடி; ஏப்.8 வரை மட்டுமே.!
அமேசான் தளத்தில், ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடு மீது ரூ.2000/- என்கிற எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு கிடைக்கும். மறுகையில் உள்ள 32ஜிபி மீது ரூ.1000/- என்கிற தள்ளுபடி கிடைக்கும்.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நேற்று இந்தியாவில் அதன், ஹானர் வேர்ல்ட் கார்னிவல் விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (அதாவது ஏப்ரல் 4, 2018) தொடங்கி ஏப்ரல் 08, 2018 வரை நீளும் இந்த விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்களுக்கு, என்னென்ன சலுகைகள் கிடைக்கும்.? எங்கு கிடைக்கும் என்பதை விரிவாக காணலாம்.
இந்த சலுகையானது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும், அத்துடன் சேர்த்து பிரபல இ-காமர்ஸ் வலைத்தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் ஆகியவைகளிலும் வாங்க கிடைக்கும்.

ஹானர் 7எக்ஸ்.!
அமேசான் தளத்தில், ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடு மீது ரூ.2000/- என்கிற எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு கிடைக்கும். மறுகையில் உள்ள 32ஜிபி மீது ரூ.1000/- என்கிற தள்ளுபடி கிடைக்கும்.

ஹானர் 8 ப்ரோ மற்றும் ஹானர் 6எக்ஸ்.!
ஹானர் 8 ப்ரோ மற்றும் ஹானர் 6எக்ஸ்-ஐ பொறுத்தவரை முறையே ரூ.7,000 மற்றும் ரூ.4,000/- என்கிற தள்ளுபடி கிடைக்கும். இந்த வாய்ப்பின்கீழ், எந்த விதமான இஎம்ஐ விருப்பமும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 9ஐ.!
ப்ளிப்கார்ட்டில், ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாடல் மீதும் மற்றும் ஹானர் 9ஐ மீதும் ரூ.2000/- என்கிற கூடுதல் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு கிடைக்கும்.உடன் ஹானர் ஹோலி 3 மற்றும் ஹோலி 3 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் மீது முறையே, ரூ.4,000/- மற்றும் ரூ.6,500/- என்கிற அளவிலான தள்ளுபடியும் கிடைக்கும்.

ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 7எக்ஸ்.!
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், சூப்பர்கேஷ் வழியிலாக ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 7எக்ஸ் மீதான தள்ளுபடிகள் கிடைக்கும். அதாவது, மொபிவிக் வேலட் பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு ஹானர் 7எக்ஸ் மீது 10 சதவிகிதம் சூப்பர்கேஷ் கிடைக்கும் (அதிகபட்சம் ரூ.1000/- தள்ளுபடி கிடைக்கும்).

இலவச ஹானர் பேண்ட் கிடைக்கும்.!
ஒவ்வொரு 50-வது ஆர்டருக்கும் ஒரு இலவச ஹானர் பேண்ட் கிடைக்கும், உடன் குழுக்கல் முறையில், ஹானர் 7எக்ஸ் வாங்கும் பயனர்களுக்கும் இலவசமாக ஹானர் பேண்ட் ஒன்று கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹானர் 8 லைட்-ன் கேஸ்கள் ரூ.29/-க்கு.!
மேலும், ஹானர் 8 ப்ரோ கேஸ்கள் மீதான ரூ.1/- ப்ளாஷ் விற்பனையும் நடக்கவுள்ளது மற்றும் ஹானர் பாகங்கள் மீது 90 சதவிகிதம் வரை தள்ளுப்படியும் கிடைக்கும். ரூ.999/- மதிப்புள்ள ஹூவாய் க்விக் சார்ஜ் ஏபிP32 ஆனது வெறும் ரூ,499/-க்கு வாங்க கிடைக்கும். இந்த விற்பனையில், ஹானர் 8 லைட்-ன் கேஸ்கள் ரூ.29/-க்கும், ஹானர் 6எக்ஸ் பிசி அன்ட் பிளிப் கேஸ்கள் ரூ.29 மற்றும் ரூ.99/-க்கும் மற்றும் ஹானர் 8 லைட் பிளிப் கேஸ்கள் ரூ.49/-க்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications