இது Honor கச்சேரி.. 10,000mAh பேட்டரி உடன் புதிய ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் சமீபத்தில் 10,000mAh பேட்டரிக்கான சான்றிதழை பெற்று இருந்தது. முதலில் இந்த 10,000mAh பேட்டரி ஆனது ஹானர் பவர் 2 (Honor Power 2) ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "இந்த டிவிஸ்ட்-ஐ எதிர்பார்க்கலயே" என்கிற படியாக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் ஹானர் நிறுவனம் அதன் 10,000mAh பேட்டரியை ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல ஹானர் ஜிடி 2 (Honor GT 2) ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த உள்ளது. அதாவது இந்நிறுவனம் ஒரே நேரத்தில் 10,000mAh பேட்டரி கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனிலும் பணியாற்றுகிறது.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, இந்த இரண்டாவது மாடல் ஏற்கனவே சீனாவில் சோதனை உற்பத்திக்குள் நுழைந்துள்ளது. இதன் பேட்டரி 36.88Wh (9755mAh) என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சுமார் 9900mAh திறன் கொண்டது. மேலும் இறுதி செய்யப்பட்டவுடன் முழு 10,000mAh-ஐ கூட எட்டக்கூடும்.
இதுதவிர்த்து ஹானர் ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு வெளியான ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Snapdragon 8 Elite SoC) கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் ஹானர் ஜிடி 2 ப்ரோ மாடல் ஆனது குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் (Snapdragon 8 Elite Gen 5 SoC) கொண்டு இயங்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த சீரீஸில், அதாவது ஹானர் ஜிடி 2 சீரிஸில் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (3D ultrasonic fingerprint sensor) மற்றும் முழுமையான நீர் எதிர்ப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ஹானர் ஜிடி 2 மற்றும் ஹானர் ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்களை (IP68 and IP69 Rating) பெறலாம்.
ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது மீடியாடெக்கின் டைமன்சிட்டி 8500 சிப்பை (MediaTek Dimensity 8500 chip) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.79-இன்ச் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்
முன்னரே குறிப்பிட்டபடி இதுவும் 10,000mAh பேட்டரி உடன் வரும். மிகப்பெரிய பேட்டரி இருந்தபோதிலும், இது சுமார் 8 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது, அதாவது இது ஸ்லிம் ஆன டிசைனை பெறும். மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது அண்டர்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Under-display optical fingerprint sensor) மற்றும் டிராப்-ரெசிஸ்டண்ட் பாடியையும் (drop-resistant body) கொண்டிருக்கலாம்.
கடந்த மாதம் ஹானர் நிறுவனம் ஆனது 7200mAh பேட்டரி, 200எம்பி டெலிபோட்டோ கேமரா உடனான ஒரு ப்ரோ மாடல் மற்றும் 7000mAh பேட்டரி, 64எம்பி சூப்பர் நைட் காட் டெலிஃபோட்டோ கேமரா உடனான ஒரு வெண்ணிலா மாடல் - என ஒரே நேரத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
அவைகள் ஹானர் மேஜிக் 8 மற்றும் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகும். ஹானர் மேஜிக் 8 ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.55,000 க்கும், 12GB + 512GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.59,100, ரூ.61,600 மற்றும் ரூ.67,800 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மறுகையில் உள்ள ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.70,200 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








