Home
Mobile

அப்படி போடு.. Honor-ன் புதிய மினி போன்.. OLED டிஸ்பிளே, டைமன்சிட்டி 9500 சிப், பெரிய பேட்டரி, ஸ்லிம் டிசைன்!

2025 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் துறையில் டிரெண்டிங் ஆக உள்ள "மினி ஸ்மார்ட்போன்" கான்செப்ட்டில் ஹானர் நிறுவனமும் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிறுவனம் வருகிற அக்டோபர் மாதத்தில் அதன் ஹானர் மேஜிக் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக, இந்த சீரிஸின் கீழ் ஹானர் மேஜிக் 8 மற்றும் ஹானர் மேஜிக் 8 ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சீரீஸில் ஹானர் மேஜிக் 8 மினி (Honor Magic 8 Mini) என்று அழைக்கப்படும் ஒரு காம்பாக்ட் ஸ்மார்ட்போனும் இருக்கலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி போடு.. Honor-ன் புதிய மினி போன்!

சீன சமூக ஊடகத்தளமான வெய்போ வழியாக, நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன், ஹானர் மேஜிக் 8 மினி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, சிப்செட் ஆகிய விவரங்களை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, இது எப்போது அறிமுகமாகும் என்கிற தகவலையும் லீக் செய்துள்ளார்.

ஹானர் மேஜிக் 8 மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஹானர் மேஜிக் 8 மினி ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் அளவிலான ஓஎல்இடி டிஸ்பிளேவை (6.3 inch OLED Display) பேக் செய்யும்.

ஹானர் மேஜிக் 8 மற்றும் ஹானர் மேஜிக் 8 ப்ரோ மாடல்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டை (Snapdragon 8 Elite 2 chipset) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஹானர் மேஜிக் 8 மினி மாடலில் டைமன்சிட்டி 9500 சிப்செட் (Dimensity 9500 SoC) இருக்கலாம்.

ஹானர் மேஜிக் 8 மினி ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இது தற்போதைய பொறியியல் முன்மாதிரி உடன் ஒரு பெரிய பேட்டரி மற்றும் தேவையான அனைத்து விவரக்குறிப்புகளையும் கொண்டிருந்தாலும் மிகவும் ஸ்லிம் ஆன வடிவமைப்பை பெறும் என்பது டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் குறிப்பிட்டுள்ளார்

ஹானர் மேஜிக் 8 மினி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? ஹானர் மேஜிக் 8 மினி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை பொறுத்தவரை, இது 2025 அக்டோபர் மாதத்தில் ஹானர் மேஜிக் 8 சீரீஸ் உடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக இது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் மேஜிக் 8 சீரிஸ் முன்பாக ஹானர் பிராண்ட் ஆனது சீன சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதன் ஹானர் மேஜிக் வி ஃபிளிப் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இது வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வரும்.

மேலும் ஹானர் மேஜிக் வி ஃபிளிப் 2 ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஃபிளிப் போன் பிரிவில் இதுவரை நாம் கண்டிராத மிகப்பெரிய பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் பேக் செய்யும். இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி என்றதும் இந்நிறுவனம் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதை பற்றி பேசாமல் இக்கட்டுரையை முடிக்க முடியாது. ஹானரின் 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போனை பற்றிய தகவல்களையும் கூட டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தான் வெளியிட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலின்படி - ஹானர் 10,000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது என்பிஐ (NPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது; அதாவது நியூ ப்ராடெக்ட் இன்ட்ரோடெக்ஷன் (New Product Introduction) நிலைக்கு வந்துவிட்டது.

ஹானர் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், சீன சமுக ஊடகத்தளமான வெய்போவில் கருத்து தெரிவிப்பவர்கள் இது ஹானர் பவர் 2 (Honor Power 2) ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம் என்று யூகித்து உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், ஹானர் நிறுவனம் 8,000mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்ததால், அடுத்த மாடல் - இன்னும் பெரிய பேட்டரியுடன் ஹானர் பவர் 2 ஆக வருமென்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Working on New Mini Smartphone Could be Honor Magic 8 Mini Display Chipset Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X