Home
Mobile

8100mAh பேட்டரிக்கு ஒப்புதல்.. மொத்த மார்க்கெட்டையும் மிரள விடப்போகும் சைனீஸ் போன்.. என்ன மாடல்?

கடந்த ஏப்ரல் மாதத்தில், ஹானர் நிறுவனம் ஆனது 8000mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் பவர் என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகை ஆச்சரியப்படுத்தி இருந்தது. இதற்கிடையில் ​​டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் புதிய வெய்போ பதிவின்படி, இந்த பிராண்ட் மேலும் ஒரு பிக் பேட்டரி ஸ்மார்ட்போனில் செயல்பட்டு வருகிறது.

சுவாரசியமாக ஹானர் நிறுவனத்தின் இந்த புதிய பேட்டரி ஏற்கனவே சீனாவின் 3சி சான்றிதழ் ஆணையத்திடம் இருந்து ஒப்புதலும் பெற்று உள்ளது. 3சி தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளன 8100mAh (மதிப்பிடப்பட்ட திறன்) பேட்டரி ஆனது இரண்டு லிஸ்டிங்கில் காணப்பட்டு உள்ளது.

8100mAh பேட்டரிக்கு ஒப்புதல்.. சைனீஸ் போன்.. என்ன மாடல்?

இரண்டு பேட்டரிகளும் HB5668A0EIW என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளன. ஆனால் அவைகள் வெவ்வேறு நிறுவனங்களால் (சன்வோடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹானர்) தயாரிக்கப்படுகின்றன. இது 30.54Wh மதிப்பிடப்பட்ட பவர், 3.77V பெயரளவு மின்னழுத்தம் மற்றும் 4.53V அதிகபட்ச சார்ஜிங் மின்னழுத்தம் கொண்ட லி-அயன் பாலிமர் பேட்டரி ஆகும்.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் ஃபைனல் மாடல் பெயர், வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இது பெரும்பாலும் ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் "வாரிசாகவோ" அல்லது மேம்படுத்தப்பட்ட எடிஷன் ஆகவோ அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது

நினைவூட்டும் வண்ணம் ஹானர் பவர் ஸ்மார்ட்போன் ஆனது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 8,000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 6.78-இன்ச் OLED 1.5K 120Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான MagicOS 9, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளார்.

ஹானர் நிறுவனத்தின் இன்னொரு "அப்கம்மிங் ஸ்மார்ட்போன்" ஆன ஹானர் மேஜிக் வி5 போல்டபிள் ஸ்மார்ட்போனிலும் கூட பெரிய பேட்டரி பேக் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் ஸ்லிம் ஆன 8.8மிமீ பாடி டிசைன் உடன் 6100mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவொரு பக்கம் இருக்க போக்கோ நிறுவனம் 7550mAh பேட்டரி உடனான தனது புதிய ஸ்மார்ட்போனை ஜூன் 24 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அது போக்கோ எப்7 5ஜி (Poco F7 5G) ஸ்மார்ட்போனாகும். போக்கோ நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் உலகளாவிய சந்தைக்கான போக்கோ எப்7 ப்ரோ (Poco F7 Pro) மற்றும் போக்கோ எப்7 அல்ட்ரா (Poco F7 Ultra) மாடல்களை வெளியிட்டது.

இந்த சீரீஸில் போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனும் (உலகளவில்) இணைய உள்ளது. இருப்பினும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரே ஒரு எப் 7-சீரிஸ் மாடலாகவும் இது இருக்கும். 7550mAh பேட்டரி மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனில் 22.5W வரையிலான ஸ்பீடில் மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்வதற்கான ஆதரவு இருக்கும், இதை ஒரு பவர் பேங்காக பயன்படுத்தலாம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன விலைக்கு வரலாம்? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யலாம்? இந்தியாவில் போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது கடந்த 2025 ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆக கீழ்வரும் அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்:

- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 6.83-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்பிளே
- 16GB வரை ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 8s Gen 4) சிப்செட்
- OIS உடன் 50எம்பி சோனி IMX766 ப்ரைமரி சென்சார்
- 8எம்பி அல்ட்ராவைடு சென்சார்
- 20எம்பி செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 கஸ்டம் யுஐ
- ஐபி68 / ஐபி69 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு
- ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஐஆர் பிளாஸ்டர்

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Working on 8100mAh Battery Smartphone May Launch Under Honor Power Series Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X