Home
Mobile

ஆத்தாடி ஆத்தா.. 12000mAh பேட்டரி உடன் புது HONOR போன்.. எந்த மாடல்?

ஹானர் (Honor) நிறுவனம் பிக் பேட்டரி போன்கள் (Big Battery Phones) மீதான தனது கவனத்தை இரட்டிப்பாக்குகிறது. கடந்த ஆண்டு வெளியான வின் (WIN) சீரீஸின் மூலம் இந்நிறுவனம் 10,000mAh பிரிவில் நுழைந்தது. அதன் பிறகு, தற்போது அந்த உத்தியை (அதாவது 10,000mAh பேட்டரி கெப்பாசிட்டியை) மேலும் பல ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விரிவுபடுத்துவதாக வதந்திகளில் பரவி வருகிறது.

மொத்தம் ஏழு 10,000mAh பேட்டரி போன்கள் ரெடி ஆகிறது: ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது, ஹானர் நிறுவனம் ஆனது 10,000mAh திறன் கொண்ட பேட்டரிகளுடன் கூடுதலாக நான்கு ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறுகிறது. ஆக ஏற்கனவே சந்தையில் உள்ள மூன்று மாடல்களுடன் இவற்றையும் சேர்த்தால், ஹானரிடம் மொத்தம் ஏழு 10,000mAh போன்கள் இருக்கும். வேறு எந்த பிராண்டும் இந்த எண்ணிக்கைக்கு அருகில் கூட இல்லை.

ஆத்தாடி ஆத்தா.. 12000mAh பேட்டரி உடன் புது HONOR போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் டூயல்-செல் 10,000mAh பேட்டரியை (dual-cell 10,000mAh battery) சோதித்து வருகிறது: வரவிருக்கும் நான்கு போன்களில் இரண்டு மிகவும் சுவாரஸ்யமான மாடல்களாக இருக்கும். ஒன்று - 12,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது, இது மெயின்ஸ்ட்ரீம் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய உச்சமாகும்.

இரண்டாவது ஸ்மார்ட்போனில் டூயல்-செல் 10,000mAh பேட்டரி வடிவமைப்பை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது இந்த துறையில் ஒரு முதல் முறையாக இருக்கலாம். இந்த டூயல்-செல் அமைப்பானது - வெப்பத்தை குறைத்து, சார்ஜிங் செயல்திறனை அதிகரிக்க உதவலாம். இதன் மூலம் ஒரு 10,000mAh பேட்டரியை கொண்ட ஹானர் போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் இருந்தால், அது உங்களுடைய கைகளை சூடாக்காமல் சார்ஜ் செய்யும் திறனை பெறும்.

இருப்பினும் வெளியான லீக் தகவல் ஆனது குறிப்பிட்ட ஹானர் ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்களை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் வதந்திகளின் அடிப்படையில், இந்த போன்கள் ஹானர் எக்ஸ்80 (Honor X80), ஹானர் பவர் 3 (Honor Power 3) மற்றும் ஒரு புதிய வின் 2 சீரீஸின் (WIN 2 Series) ஒரு பகுதியாக இருக்கலாம்.

தற்போது, ஹனாரி நிறுவனம் தனது உள்நாட்டு சந்தையில் இந்த பிரிவில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கே தற்போதுள்ள நான்கு 10,000mAh திறன் கொண்ட போன்களில், மூன்று இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை. இதற்கு ஒரே விதிவிலக்கு விவோ ஒய்600 ப்ரோ (Vivo Y600 Pro) ஆகும், இது 10,200mAh பேட்டரியுடன் வருகிறது.

விரைவில் மற்ற பிராண்டுகளும் இந்த துறையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ (Oppo), ஷாவ்மீ (Xiaomi) மற்றும் ஹூவாய் (Huawei) ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு இதே போன்ற ஸ்மார்ட்போன்களில் பணியாற்றி வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அவர்களின் அணுகுமுறை மிகவும் எச்சரிக்கையானதாக உள்ளது.

அவர்கள் ஒரு பிக் பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி, அது எப்படி போகிறது என்று பார்ப்பார்கள். ஆனால் ஹானர் நிறுவனம் அபப்டி இல்லை. இது முழு வீச்சில் களமிறங்குகிறது. நீண்ட பேட்டரி லைஃப் என்று யாராவது குறிப்பிட்டவுடன், மக்கள் நினைக்கும் பிராண்டாக ஹானர் இருக்க வேண்டும் என்று இந்நிறுவனம் விரும்புவதாக தெரிகிறது.

10,080mAh பேட்டரி ஹானர் பவர் 2: நினைவூட்டும் வண்ணம் ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 10,080mAh பேட்டரி, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 14.2 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும், 17.3 மணிநேரம் வரை நேவிகேஷன் நேரத்தையும் வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

10,000mAh பேட்டரி ஹானர் வின் சீரீஸ்: ஹானரின் வின் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 16.4 மணிநேரம் வரை தொடர்ச்சியான கேமிங் நேரத்தையும், 31.3 மணிநேரம் வீடியோ ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டாண்டர்ட் ஹானர் வின் மாடல் ஆனது 80W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor Working on 2 Interesting Big Battery Phones 12000mAh phone and dual cell 10000mAh phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X