10000mAh பேட்டரி உடன் புது Honor போன்.. 7000mAh - 8000mAh உடன் அடுத்தடுத்து வரும் பல போன்கள்.. இதோ லிஸ்ட்!
ஹானர் (Honor) நிறுவனம் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் 8000mAh பேட்டரி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் (8000mAh Battery Phone) ஆன ஹானர் பவர் (Honor Power) மாடலை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட்போன் சாம்பிராஜ்யத்தையே அலறவிட்டு இருந்தது. அதை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் இன்னும் பெரிய 8300mAh பேட்டரியுடன் (8300mAh Battery Phone) கூடிய ஹானர் எக்ஸ்70 (Honor X70) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது.
இதே வேகத்தில் ஹானர் நிறுவனம் ஆனது 10000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை (10000mAh Battery Smartphone) அறிமுகம் செய்ய உள்ளதாவும், இந்நிறுவனம் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு ஹானர் பவர் சீரிஸ் (Honor Power Series) ஸ்மார்ட்போனாக இருக்குமா? வேறு எந்தெந்த நிறுவனங்கள் இதுபோன்ற பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களில் புரிகின்றன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் (Tipster Digital Chat Station) கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஹானர் நிறுவனம் ஆனது 10000mAh பேட்டரி கொண்ட ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை சோதிக்க தொடங்கும். பெரிய பேட்டரி இருந்தபோதிலும், இந்த ஸ்மார்ட்போன் 8.5 மிமீ தடிமன் என்கிற ஸ்லிம் ஆன வடிவமைப்பையே (8.5mm Slim Design) பெறும். இதுதவிர்த்து வேறு எந்த அம்சங்களை பற்றியும் எந்த தகவலும் இல்லை.
ஹானர் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் சோதனையை தான் அடுத்த ஆண்டு செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இது அடுத்த ஆண்டே அறிமுகமாகும் என்பதில் எந்த உறுதிப்பாடும் இல்லை. ஆனால் பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் ஹானர் நிறுவனத்தின் பவர் சீரிஸின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்படும். அதன் முதல் தலைமுறை மாடல் 8,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆக அடுத்ததும் பிக் பேட்டரியை தான் பேக் செய்யும்.
வேறு எந்தெந்த நிறுவனங்கள் இதுபோன்ற பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களில் பணி புரிகின்றன? பெரிய அளவிலான பேட்டரி திறன்களில் கவனம் செலுத்தும் ஒரே பிராண்ட் ஹானர் மட்டும் அல்ல. ஒப்போ நிறுவனம்அதன் லேட்டஸ்ட் மாடல் ஆன ஒப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ (OPPO K13 Turbo Pro) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 7,000mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (7000mAh Battery with 80W Fast Charging Support) வருகின்றன. இதேபோல் ரியல்மி (Realme) நிறுவனமும் இந்த வார இறுதியில் இந்தியாவில் அதன் ரியல்மி 15 ப்ரோ (Realme 15 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதிலும் மேற்கண்ட அதே பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வரவிருக்கும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus) மற்றும் ஐக்யூ இஸட் சீரிஸ் (iQOO Z Series) ஸ்மார்ட்போன் ஆகியவை முறையே 7,000mAh மற்றும் 8,000mAh பேட்டரிகளை கொண்டிருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது.
இதோடு 2025 செப்டம்பரில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஷாவ்மீ 16 சீரிஸில் (Xiaomi 16 Series) கூட 7,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மற்றும் முதன்மை ஸ்மார்ட்போன்களில் 7,000mAh க்கும் அதிகமான பேட்டரிகள் இடம்பெறுவது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதால்.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பேட்டரி லைஃப் (Battery Life) நோக்கிய முன்னுரிமைகளில் அதிக கவனம் செலுத்துவதை குறிக்கிறது.


Click it and Unblock the Notifications








