Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. மிரளவிட்ட HONOR போன்.. எந்த மாடல்?

மொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் வின் (HONOR WIN) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மேலும், ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொடுத்து மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஹானர் வின் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் இந்த ஹானர் வின் மற்றும் ஹானர் வின் ஆர்டி (HONOR WIN RT) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஹானர் வின் ஸ்மார்ட்போன் மிட்-பிரீமியம் பட்ஜெட்டில் 10000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது மட்டுமல்லாமல், கேமரா, டிஸ்பிளே, சிப்செட் பீச்சர்களிலும் பிரீமியம் மாடல்களுக்கு நிகராக அவுட்புட் கொடுத்துள்ளது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஹானர் வின் அம்சங்கள் (HONOR WIN Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஹானர் வின் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்துள்ளது.

6.83 இன்ச் (1272 x 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 5920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 185Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் (HDR), டிசிஐ பி3 (DCI P3) வைடு கலர் காமட் மற்றும் 1.07 கலர் டெப்த் கொடுத்துள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இதில் மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது.

100X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ஏஐ சூப்பர் டெலிபோட்டோ, ஸ்டேஜ் மோட், ஈகிள் ஐ ஸ்னாப்ஷாட், ஈகிள் ஐ ஆட்டோ ஸ்னாப்ஷாட், இன்டலிஜென்ட் போகஸ் டிராக்கிங், சப்ஜெக்ட் போகஸ் டிராக்கிங், நைட் மோட் மற்றும் போர்ட்ராய்டு மோட் போன்ற கேமரா பீச்சர்களை இந்த ஹானர் வின் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,122ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.57,514ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.61,350ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.67,741ஆகவும் உள்ளது. சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR WIN With 10000mAh Battery 16GB RAM 50MP Camera Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X