ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 16GB ரேம்.. புது HONOR WIN சீரிஸ்!
மொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான பேட்டரி கேபாசிட்டியுடன் ஹானர் வின் சீரிஸ் (HONOR WIN Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. 8300mAh பேட்டரி கொண்ட ஹானர் எக்ஸ்70 (HONOR X70) ஸ்மார்ட்போனையே தூக்கி சாப்பிடும்படி இந்த ஹானர் வின் சீரிஸ் களமிறங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற டிசம்பர் 26ஆம் தேதி ஹானர் வின் (HONOR WIN) மற்றும் ஹானர் வின் ஆர்டி (HONOR WIN RT) ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டிலும் 10000mAh பேட்டரி கொண்ட முதல் மாடல்களாக இந்த சீரிஸ் இருக்கப் போகிறது. 10000mAh பேட்டரி இந்த மாடல்களில் கிடைக்க இருக்கிறது.

ஹானர் வின் சீரிஸ் அம்சங்கள் (HONOR WIN Series Specifications): 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic Fingerprint Sensor) கிடைக்கிறது. IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust and Water Resistance) கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக வெளியாக இருகின்றன.
16 ஜிபி ரேம் கிடைக்கிறது. 10000mAh பேட்டரி கிடைப்பதால், கூலிங் ஃபேன் மற்றும் விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. ஹானர் சரவுண்ட் சப்வூப்பர் 2.0 (HONOR Surround Subwoofer 2.0) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் ஆடியோ அவுட்புட் கொடுக்க இந்த டூயல் 1216 சிமெட்ரிக்கல் ஸ்பீக்கர்கள் (Dual 1216 Symmetrical sSpeakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கின்றன. இந்த பீச்சர்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பொறுத்தவரையில், இந்த மாடல்களில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்படுகிறது.

120 Hz ரெஃப்ரெஷ ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. டிசம்பர் 26ஆம் தேதி நெருங்கிவிட்டதால், ஓரிரு நாட்களில் முழு பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் தெரியவந்துவிடும். இந்த நேரத்தில் முன்னதாக வெளியான ஹானர் எக்ஸ்70 போனை பார்க்க வேண்டும்.
ஹானர் எக்ஸ்70 அம்சங்கள் (HONOR X70 Specifications): இப்போதைக்கு மார்கெட்டில் அதிக பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஹானர் எக்ஸ்70 இருக்கிறது. இதில் 8300mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளது.
மேஜிக்ஓஎஸ் 9.0 மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 6.79 இன்ச் (2640 x 1200 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு IP69K ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும IP66 ரேட்டிங் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,760ஆக இருக்கிறது. இது சீன மார்கெட்டில் விலையாகும். ஆகவே, ஹானர் வின் சீரிஸ் மாடல்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டுக்கும் கம்மியான விலைக்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








