Home
Mobile

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பேட்டரியுடன் ஹானர் வின் டர்போ (HONOR WIN Turbo) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. கூடுதலாக கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி டைமன்சிட்டி 8500 ரேசிங் எடிஷன் 4என்எம் சிப்செட் மற்றும் 16 ஜிபி ரேம் இதில் கிடைக்கிறது.

இப்போது, சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. வின் சீரிஸ் மாடல்களில் அதிக பேட்டரி கேபாசிட்டி கிடைப்பதால், உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும்படி இந்த ஹானர் வின் டர்போ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பீச்சர்களை பார்த்துவிட்டு, விலைகளுக்கு செல்லலாம்.

மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 10000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

ஹானர் வின் டர்போ அம்சங்கள் (HONOR WIN Turbo Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 ரேசிங் எடிஷன் 4என்எம் (Octa Core Dimensity 8500 Racing Edition 4nm) சிப்செட்டை இந்த ஹானர் வின் டர்போ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. மேஜிக் யுஐ 10.0 (Magic UI 10.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.79 இன்ச் (2640 x 1200 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. 8000 நிட்ஸ் எச்டிஆர் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

1800 குளோபல் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் எப்/1.88 அபெர்சர் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

எப்/2.45 அபெர்சருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust and Water Resistant) கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் வருகிறது.

80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. பெரிய பேட்டரி கொடுத்தும் 7.98 எம்எம் தடிமன் மற்றும் 216 கிராம் எடை கொடுத்துள்ளது. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) உள்ளது.

டூயல் 1115 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual 1115 Stereo Speakers) கிடைக்கின்றன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது. மேலும், வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), ஜிபிஎஸ் (GPS), ஏஜிபிஎஸ் (AGPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.46,259 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.50,468 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.58,882ஆகவும் இருக்கிறது. சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது, குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
HONOR WIN Turbo With 10000mAh Battery 50MP Camera Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X