பிரிச்சி விட்டாப்ல.. 10000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்ல புது HONOR போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 8000mAh பேட்டரி கொண்ட மாடல்கள் வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கின்றன. இருப்பினும், இன்னும் வெளியாகவில்லை. ஆனால், சீன மார்கெட்டில் நேரடியாக 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் வின் ஆர்டி (HONOR WIN RT) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. இந்த ஹானர் ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஹானர் நிறுவனத்தின் ஹானர் எக்ஸ்70 (HONOR X70) ஸ்மார்ட்போனே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இருந்தது. இதில் 8300mAh பேட்டரி கொடுக்கப்பட்டது. ஆகவே, இந்த மாடலுக்கு அடுத்து 8500mAh அல்லது 9000mAh பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரடியாக 10000mAh பேட்டரியுடன் ஹானர் வின் ஆர்டி வந்துள்ளது.

ஹானர் வின் ஆர்டி அம்சங்கள் (HONOR WIN RT Specifications): 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2000 நிட்ஸ் குளோபல் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.83 இன்ச் (1272 x 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட இந்த ட்ரூ கலர் டிஸ்பிளேவில் எச்டிஆர் (HDR), 5920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாடிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட்டை கொண்டுள்ள இந்த ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போனில் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) கிடைக்கிறது. யோயோ ஸ்மார்ட் ஏஜென்ட் (YOYO Smart Agent) கிடைக்கிறது.
மேலும், ஏஐ பேஸ் ஸ்வாப் ரிககனைசேஷன் (AI Face Swap Recognition), ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation), ஏஐ டாகுமெண்ட்கள் (AI Documents), ஏஐ நோட்ஸ் (AI Notes), டைனாமிக் கேப்சூல் (Dynamic Capsule) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஹானர் வின் ஆர்டி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ சப்போர்ட் உள்ளது. 20x டிஜிட்டல் ஜூம், 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது, இதிலும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது.
மேலும், 10000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் இந்த ஹானர் வின் ஆர்டி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,503 ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,338 ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,617 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,452 ஆகவும் இருக்கிறது. இதுபோக டாப்-எண்ட் வேரியண்ட் இருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.51,122 ஆக இருக்கிறது. சீனாவின் யுவான் அடிப்படையில், இந்த விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். இந்திய மார்கெட்டில் வெளியாகுமா என்பது குளோபல் வெளியீட்டுக்கு பிறகு தெரியவரும்.


Click it and Unblock the Notifications








