Home
Mobile

10100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. புது HONOR WIN போன்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனமானது, 10000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. வின் சீரிஸ் மாடல்களின் கீழ் 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 200 எம்பி கேமராவுடன் 10100mAh பேட்டரி கொண்ட புது மாடலாக ஹானர் வின் 2 (HONOR WIN 2) சேர்ந்துள்ளது.

இப்போது, சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. 10100mAh பேட்டரி மட்டுமல்லாமல், 10000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவை கொடுத்து, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களை தட்டித் தூக்கி இருக்கிறது. பெரிய பேட்டரிக்கு ஏற்ப டூயல் ஃபேன் 3டி ஏர்ப்ளோவ் கூலிங் சிஸ்டம் (Dual Fan 3D AirFlow Cooling System) கொடுத்து இருக்கிறது.

10100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே!

ஹானர் வின் 2 அம்சங்கள் (HONOR WIN 2 Specifications): 6.89 இன்ச் (3104 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 10000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2000 நிட்ஸ் குளோபல் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுவொரு அல்ட்ரா டைனாமிக் டிஸ்பிளே (Ultra Dynamic Display) மாடலாக இருக்கிறது.

மேலும், ட்ரூ கலர் டிஸ்பிளே (True Color Display) கிடைக்கிறது. ஆக்டா கோர் 6 ஜென் ஸ்னாப்டிராகன் 8 அல்ட்ரா (Octa Core 6 Gen Snapdragon 8 Ultra) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. அட்ரினோ 850 ஜிபியு (Adreno 850 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கிடைக்கிறது.

மேஜிக்ஓஎஸ் 11 (MagicOS 11) கொடுத்து இருக்கிறது. ஏஐ பேஸ் ஸ்வாப்பிங் டிடெக்சன் (AI Face Swapping Detection), ப்ளர் லோகேஷன் (Blur Location) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்து இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 30x டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஏஐ சூப்பர் டெலிபோட்டோ (AI Super Telephoto), ஈகிள் ஐ ஸ்னாப்ஷாட் (Eagle Eye Snapshot), இன்டலிஜன்ட் போகஸ் டிராக்கிங் (Intelligent Focus Tracking), சப்ஜெக்ட் போகஸ் டிராக்கிங் (Subject Focus Tracking) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. நைட் மோட், போர்ட்ராய்டு மோட் பீச்சர்களும் வருகின்றன.

இந்த ஹானர் வின் 2 ஸ்மார்ட்போனில் 50 செல்பீ கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2டி பேஸ் ரிககனைசேஷன் சப்போர்ட் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10100mAh பேட்டரியை கொடுக்கிறது. 27W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 80W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP68, IP69, IP69K ரேட்டிங் உள்ளன.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.77,782ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.89,098ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.82,025ஆக இருக்கிறது. இந்த விலையுடன் சீன மார்கெட்டில் கிடைக்கிறது. மேலும், ஹானர் வின் ஆர்டி2 ஸ்மார்ட்போனும் இதனுடன் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HONOR WIN 2 With 10100mAh Battery 100W Charging Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X