உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன்.!
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய கலகட்டத்திற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மிரட்டலான பல சிறப்பம்சங்களுடன் எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே டிசைன் உடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன்.

தற்பொழுது ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் அட்டகாசமான மெட்டல் கிளாஸ் வடிவமைப்புடன் கூடி சிறந்த ஆற்றல் கொண்ட சூப்பர் கூல் ஸ்மார்ட்போனாக ஜனவரி 29 ஆம் தேதி களமிறங்கியுள்ளது. இதன் தோற்றமே அனைவரையும் தன வசம் வசியம் செய்துவிட்டது. இடத்ன் ஆற்றலை உணர்ந்தவர்கள் இந்த ஆண்டிற்கான சிறந்த ஸ்மார்ட்போன் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் தான் என்று நிச்சயம் சொல்லும் விதம் அமைத்துள்ளது.

உலகின் முதல் ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்:
உலகின் முதல் ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் மாடலை ஹானர் நிறுவனம் உருவாகியுள்ளது. சிறப்பான வீடியோ அனுபவம் மற்றும் கேமிங் அனுபவத்தை அட்டகாசமான தரத்துடன் தடையில்லாமல் முழு திரையில் அனுபவிக்க இந்த ஆல் ஸ்கிரீன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் இல் இதுவரை எந்த மொபைல் நிறுவனமும் செய்திடாத முயற்சியை மேற்கொண்டு வெற்றியும் அடைந்துள்ளது. ஆல் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் கூடிய இன்பில்ட் முன்பக்க டிஸ்பிளே கேமரா சேவையை முதல் முறையாக அறிமுகம் செய்து சாதனைப் படைத்துள்ளது. 100% திரையைப் பயன்படுத்தி அத்துடன் கேமரா சேவையையும் இணைத்துச் சிறந்த அனுபவத்தை ஹானர் நிறுவனம் ஹானர் வியூ20 ஸ்மார்ட்போன் மூலம் வழங்கியுள்ளது.

பிரீமியம் மெட்டல் கிளாஸ் வி கிரேடியன்ட் டிசைன்:
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் ஒரு பிரத்தியேக கலைப்படைப்பை உருவாக்கத் திட்டமிட்டு, மலேசிய ஓவியரான ரெட் ஹாங் யியுடன் இணைந்து பிரத்தியேகமான பிரீமியம் மெட்டல் கிளாஸ் வி கிரேடியன்ட் டிசைனை ஹானர் நிறுவனம் உருவாகியுள்ளது. 2,000 கண்ணாடியைக் மறுசுழற்சி செய்து இந்த பிரீமியம் மெட்டல் கிளாஸ் டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்புறத்தில் விழும் ஒவ்வொரு வெளிச்செல்லையும் பிரதிபலிக்கும் எட்டு மின்னும் அடுக்குகளைக் கொண்டிருக்கும் படி இதன் பின்புற பேனல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாகத் தனிப்பட்ட 'வி' பேட்டர்ன் முறை கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மாறுபாடுகளுடன் உங்களின் கண்களுக்கு விருந்தாக இயற்கையின் அழகிய நிறங்களைச் சமர்ப்பித்து அரோரா நிகழ்வு பற்றி உங்களுக்கு நினைவூட்டும் படி இந்த டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.எல்.ஆர் கேமராவுக்கு நிகரான கேமரா :
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இன் 48 மெகா பிக்சல் கேமரா சேவை நிச்சயம் ஒரு புதிய புரட்சியை ஸ்மார்ட்போன் வட்டாரத்தில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் உள்ள பின்பக்க கேமராவில் Sony IMX586 உடன் கூடிய CMOS இமேஜ் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் மிக துல்லியமான விபரங்களுடன் கிடைக்கிறது.
ஏ.ஐ உதவியுடன் செயல்படும் இந்த கேமரா உங்களுக்கு 60 விதமான பிரிவுகளில் மிகத் துல்லியமாகும் சிறப்பாகவும் செயல்படுகிறது. இந்த கேமராவில் சூப்பர் ஸ்லொவ் மோஷன் வீடியோகள் 960fps விகிதம் ரெக்கார்ட் செய்ய முடியும். சிறந்த வீடியோ மற்றும் போட்டோ சேவையைப் பயனருக்கு வழங்குகிறது.

உலகின் மிகவும் மேம்பட்ட சிப்செட்:
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் உலகின் முதல் 7nm மொபைல் ஏ.ஐ கிரீன் சிப்செட் 980 ஏ.ஐ ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 20% கூடுதல் வேகம் மற்றும் 40% சதவீதம் அதிக ஆற்றல் மற்றும் 120% அதிகப்படியான ஏ.ஐ சேவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் ஏற்படும் ஹீட்டிங் பிரச்சனைகளைச் சமாளிக்க 9 குளிங்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் கூடிய 128ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களாக விற்பனைக்கு வந்துள்ளது.

மொபைல் கேமர்களின் மகிழ்ச்சி:
உலகில் உள்ள எந்த ஸ்மார்ட்போன் மாடலும் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இன் கேமிங் அனுபவத்துடன் போட்டியிட முடியாது என்று உறுதியாகச் சொல்லாம். இதற்கான முக்கிய காரணம் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இல் வழங்கப்பட்டுள்ள சிறப்பான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அம்சங்கள் தான். ஆல் வியூ டிஸ்பிளேயுடன் first Mali-G76 GPU இணக்கத்துடன் கூடிய GPU டர்போ 2.0 தொழில்நுட்பத்துடன் சிறப்பாக செயல்படுகிறது. எவ்வித தடங்கல் மற்றும் லேக் இல்லாமல் மிரட்டலான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

சிறப்பான கணெக்ட்டிவிட்டி சேவை:
நெட்ஒர்க் மற்றும் கணெக்ட்டிவிட்டி சேவை பயனர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய சேவை. ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் அடுத்த ஜெனெரேஷன் கணெக்ட்டிவிட்டி மற்றும் நெட்ஒர்க் சேவையை வழங்குகிறது. சிறப்பான கணெக்ட்டிவிட்டி சேவையினை யூடியூப், பிரௌசர், ஆன்லைன் கேம்ஸ், ஆப்ஸ் என அணைத்து சேவையும் தடையின்றி கிடைக்கிறது.

சூப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய நீண்ட கால பேட்டரி:
ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் களமிறங்கியுள்ளது. நீடித்து நிலைக்கும் இவ்வகை பேட்டரி சேவையை வழங்குவதற்காக சூப்பர் சார்ஜ்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 0% முதல் 100% சார்ஜ் செய்யும்படி இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தடை இல்லாமல் வீடியோ, கேமிங், கேமரா என அணைத்து சேவைகளையும் நாள் முழுதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








