Subscribe to Gizbot

ரூ.32,999/-ஆ அல்லது ரூ.29.999/-ஆ.? இந்த இரண்டில் எது பெஸ்ட்.?

Written By:

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிலை ஸ்மார்ட்போன் பிரிவின்கீழ் ஒன்ப்ளஸ் மற்றும் ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் போட்டியிட்டு வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுமே மதிப்புமிக்க ஸ்மார்ட்போன்களின் பிரிவில் சிறப்பான கருவிகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அவைகளை ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் கூட ஒப்பிடலாமென்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.32,999/-ஆ அல்லது ரூ.29.999/-ஆ.? இந்த இரண்டில் எது பெஸ்ட்.?

அப்படியாக, இந்த ஆண்டு ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் 5டி மற்றும் ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் வியூ 10 ஆகிய இரண்டிற்கும் கடுமையான போட்டி நிலவியது. இரண்டு கைபேசிகளுமே மேல்-வரிசை-வன்பொருல்களை தன்னுள் கொண்டுள்ளன. உடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டு இயங்குகின்றன. மிக முக்கியமாக இரு ஸ்மார்ட்போன்களுமே இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புகளை கொண்டுள்ளன.

ஒன்ப்ளஸ் 5டி ரூ.32,999/-க்கு விற்கப்படும் மறுகையில் சற்று குறைந்த விலையில் அதாவது ரூ.29.999/-க்கு ஹானர் வியூ 10 விற்கப்படுகிறது. இந்த இடத்தில் நமக்குள் எழும் ஒரே கேள்வி - இந்த இரண்டில் எது பெஸ்ட்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வடிவமைப்பு

வடிவமைப்பு

இந்த ஒன்ப்ளஸ் மற்றும் ஹானர் கருவிகள் இரண்டுமே - மென்மையான, நேர்த்தியான மற்றும் பிரீமியம் வடிவமைப்பை கொண்டுள்ளன மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே உலோகத்திலிருந்து கட்டப்பட்டு, முன்பக்கம் குறைந்தபட்ச பெஸல்கள் கொண்ட நவீன வடிவமைப்புடன் பாணியுடன் ஒத்திசைந்து செல்கின்றன. ஹானர் வியூ 10 ஆனது ஒரு பிளாட் பின்புற பலகை கொண்டிருக்க, மறுகையில் உள்ள 5டி ஆனது பின்புற கைரேகை ஸ்கேனர் ஏற்றப்பட்ட மற்றும் உயரமான ஒரு கருவியாக இருக்கிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இருப்பினும் கூட 5டி உடன் ஒப்பிடும் போது ஹானர் வியூ 10 ஆனது மிகவும் எதிர்காலத்திற்கு உரிய மற்றும் நவீனமான ஒன்றாக தெரிகிறது. இரண்டுமே முழு எச்டி+ டிஸ்ப்ளேக்களை மற்றும் 2160x1080 பிக்சல்கள் என்க்ரியா திரை தீர்மானத்தை கொண்டுள்ளன. உடன் இரண்டு கைபேசிகளிமே 18: 9 என்கிற காட்சி விகிதத்தில் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே மற்றும் அதிவேக மல்டிமீடியா பார்வை அனுபவத்தை வழங்குகின்றன. ஹானர் வியூ 10 ஆணடகு 5.99 அங்குல எல்சிடி திரை கொண்டிருக்க மறுகையில் உள்ள 5டி ஆனது 6.01 அமோ எல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

வன்பொருள்

வன்பொருள்

இந்த இடத்தில விடயங்கள் இன்னும் சுவாரசியமாகிறது. இரண்டு கைபேசிகளுமே முதன்மை சிப்செட்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஆனால் ஹானர் வியூவ் 10 ஆனது 5டி-ஐ ஒரு இடத்தில் முந்துகிறது. அதாவது வியூ 10 ஆனது கிரின் 970 ஏஐ சிப்செட் கொண்டு ஒரு பிரத்யேக நரம்பியல் செயலாக்க அலகுக்கு துணைபுரிகிறது. இதன் அர்ப்பணிக்கப்பட்ட என்பியூ அலகுடன் இணைந்திருக்கும் சிபியூ ஆனது அடிப்படையிலேயே ஹானர் வியூ 10-ன் புகைப்படம் எடுத்தல், மீடியா பிளேபேக், பேட்டரி நுகர்வு, கேமிங் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்பட வைக்கும்.

பன்முகத்தன்மை

பன்முகத்தன்மை

மறுகையில் ஸ்னாப்டிராகன் 835 சிபியூ மூலம் இயக்கப்படும் 5டி ஆனது ஒப்பீட்டளவில் பயன்பாட்டை வேகமாக திறப்பது, மேம்பட்ட பதிவிறக்க வேகம், சிறந்த கேமரா செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுள் அனுபவத்தை வழங்குகிறது. பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை, ஹானர் வியூ 10 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி ஆகிய இரண்டுமே 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏஐ ஆற்றலுடன் கூடிய நினைவக தேர்வுமுறையை பொறுத்தமட்டில் வியூ 10 சற்றே சிறப்பாக உள்ளது.

கேமரா செயல்திறன்

கேமரா செயல்திறன்

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே இரட்டை-லென்ஸ் கேமரா அமைப்புகளை வெளிப்படுத்துகின்றன, மேலும் சுவாரஸ்யமான டெப்த் வியூ விளைவை கொண்ட போர்ட்ரியட் படங்களை கைப்பற்றும் திறனை கொண்டுள்ளன. ஹானர் வியூ 10 ஆனது 20எம்பி ஒற்றை நிற லென்ஸ் மற்றும் ஒரு 16எம்பி ஆர்ஜிபி லென்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இதன் ஏஐ பொருத்தப்பட்ட கேமராவானது படப்பிடிப்பு நிலைமைகள் மீது சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது மற்றும் சிறந்த வெளியீட்டை வழங்க கேமராவின் அமைப்புகளை தானாக சரிசெய்யும் திறனும் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ஒன்ப்ளஸ் 5டி (20எம்பி + 16எம்பி முதன்மை இரட்டை கேமரா மற்றும் 16எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா) ஆனது எந்த ஏஐ திறன்களையும் கொண்டு வரவில்லை.

மென்பொருள்

மென்பொருள்

மென்பொருளைப் பொறுத்தவரை, இரண்டு ஸ்மாபோன் தயாரிப்பாளர்களுமே சிறந்த அனுபவத்தை உறுதி செய்கின்றன. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆதரவுடன், 5டி மற்றும் வியூவ் 10 ஆகிய இரண்டுமே வலுவான மற்றும் திரவ மென்பொருள் அனுபவத்தை வழங்குகின்றன. ஒன்ப்ளஸ் 5டி ஸ்டார்க் ஆண்ட்ராய்டு பயனர் இடைமுகத்தை நம்பியிருக்கும் மறுகையில் வியூ 10 ஆனது நிறுவனத்தின் சொந்த இஎம்யூஐ 8.0 என்று அழைக்கப்படும் அம்சங்கள் நிறைந்த மென்பொருளை கொண்டுள்ளது. இதன் இயந்திர கற்றலானது இன்னுமதிக பயனர் நட்பு மென்பொருள் அனுபவத்தை வழங்குமென்பதில் சந்தேகமில்லை.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஹானர் வியூ 10 ஆனது பேட்டரி மற்றும் இணைப்பு துறைகளில் முன்னணி வகிக்கிறது. இதன் ஏஐ ஆதரவுடனான சிப்செட் ஆனது பேட்டரி நுகர்வு மீது சிறந்த கட்டுப்பாட்டை செலுத்துகிறது. இதன் விளைவாக 5டி பேட்டரியை விட வியூ 10 அதிக பேட்டரி ஆயுளை வழங்குகிறது. ஒன்ப்ளஸ் 5டி ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி அலகு கொண்டிருக்க மறுகையில் வியூ 10 ஆனது 3750எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. உடன் வியூ 10 ஆனது இரண்டு 4ஜி சிம் அட்டை ஸ்லாட்ரு கொண்டு இரண்டிலுமே வோல்ட் ஆதரவை வழங்குகிறது, இது ஒன்ப்ளஸ் 5டி-யில் கிடையாது.

எது பெஸ்ட்.?

எது பெஸ்ட்.?

ஒன்ப்ளஸ் 5டி உடன் ஒப்பிடும் போது, ஹானர் வியூ 10 ஆனது ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பாக செயல்படுவதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வியூ 10 ஆனது 5டி-ஐ விட குறைவான விலை நிர்ணயத்தையே கொண்டுள்ளது. உடன் உங்களின் பணத்திற்கு ஏற்ற மதிப்பையும் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Honor View 10 vs OnePlus 5T: Which offers better value for your money. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot