ரூ.30 ஆயிரத்திற்கு கிடைக்கக்கூடிய சிறந்த ஃபோன்: ஹானர் வ்யூ 10

|

உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனுபவத்தை எல்லா வகையிலும் சிறந்ததாக மாற்றும் வகையில், ஹூவாயின் தயாரிப்பான கிரின் 970 ஏஐ சிப்செட் இணைப்பில் நியூரல் செயல்பாட்டு தன்மையை, ஹானர் வ்யூ 10 பெற்றுள்ளது. இந்தியாவில் ரூ.29,999 என்ற கவர்ச்சிகரமான விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், உயர்தர நடுநிலை வரம்பு விலை பிரிவில் உள்ள ஒன்பிளஸ் 5டி-யை கூட பின்னுக்கு தள்ளும் திறனைக் கொண்டதாகத் தெரிகிறது.

ரூ.30 ஆயிரத்திற்கு கிடைக்கக்கூடிய சிறந்த ஃபோன்: ஹானர் வ்யூ 10

இதில் புத்திக்கூர்மையுள்ள ஏஐ கொண்ட சிப்செட் இருப்பதைத் தவிர, இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு, 18:9 விகிதத்தில் அமைந்த திரை, தாராளமான ரேம் கொள்ளளவு மற்றும் கவர்ச்சிகரமான மெட்டல் அமைப்பு ஆகியவை காணப்படுகின்றன. இதையெல்லாம் கொண்ட ஸ்மார்ட்போன்களிலேயே மிடுக்குடைய ஃபோனாக ஹானர் வ்யூ 10 திகழுமா? என்பதை கண்டறிய உதவும் எங்கள் மதிப்புரை கீழே அளிக்கிறோம்.

கிரின் 970 ஏஐ சிப்செட்:

கிரின் 970 ஏஐ சிப்செட்:

இது ஹூவாய் நிறுவனத்தின் முதல் மொபைல் ஏஐ கம்யூட்டிங் தளமாக அமைந்து, நியூரல் செயல்பாட்டு தன்மையை (என்பியூ) அளிக்கிறது. இது சிபியூ உடன் சேர்ந்து, ஹானர் வ்யூ 10-ல் எடுக்கப்படும் புகைப்படம், மீடியா ப்ளேபேக், பேட்டரி செலவீனம், கேமிங் என்று அனைத்தையும் கவனித்து கொள்கிறது. 10 என்எம் அளவில் உருவாக்கப்பட்டுள்ள இது, ஒரு சதுர சென்டி மீட்டரில் 5.5 பில்லியன் டிரான்சிஸ்டர்களைக் கொண்டிருக்கிறது.

உங்கள் நகத்தின் அளவை விட குறைவாக இருக்கும் இந்த சிப்செட், ஆக்டோ-கோர் சிபியூ, 12-கோர் மாலி ஜிபியூ, இரட்டை ஐஎஸ்பி, ஏஐ கம்ப்யூட்டிங் கட்டமைப்பு மற்றும் ஒரு நவீன மொபைலுக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றுள்ளது.

அனுதின நடவடிக்கையில் அதிவேகம்

அனுதின நடவடிக்கையில் அதிவேகம்

நம் அனுதின பயன்பாடுகளில் மந்தமான செயல்பாட்டைத் தவிர்க்கும் வகையில், தாராளமான ரேம் உடன் கூடிய ஏஐ கொண்ட ஆக்டா-கோர் சிபியூ-வை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. எனவே கூகுளின் முன்னணி தயாரிப்பான பிக்ஸல் 2 எக்எல்-லை விட பாதி விலையில் கிடைப்பதோடு, ஒத்த கம்ப்யூட்டிங் திறன் மற்றும் பன்முக செயல்பாட்டை அளிப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

மற்ற ஃபோன்களுடன் ஒப்பிடும் போது, ஒரே நெட்வார்க்கில் இயக்கினாலும் அப்ளிகேஷன்களில் அதிக வேகத்தை காண முடிகிறது. மேலும் ஒரு சிறந்த என்பியூ இல்லாமலேயே, மற்ற ஃபோன்களை விட 300% வேகமாக வ்யூ 10 செயல்படும் என்கிறது ஹானர் நிறுவனம். இதிலிருந்து மற்ற முன்னணி ஃபோன்களை விட, நீங்கள் பயன்படுத்தும் முறை குறித்து ஹானர் 10-ல் உள்ள ஏஐ நன்கு புரிந்து வைத்துள்ளது என்பது தெரிகிறது.

மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பீடு

மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பீடு

ஹானர் வ்யூ 10-னின் வேகத்தை ஒப்பிடும் வகையில், ஒன்பிளஸ் 5டி, எல்ஜி வி30+ மற்றும் கூகுள் பிக்ஸல் 2 எக்ஸ்எல் போன்ற ஃபோன்களை ஒருமித்து இயக்கி பார்த்தேன். ஏனைய மூன்றும் வ்யூ 10-யை விட அதிக விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

செயல்படும் வேகத்தை பொறுத்த வரை, அப்ளிகேஷன்கள், இணைய பக்கங்கள் மற்றும் கேம்களில், பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. நினைவக நிர்வாகத்தில் கூடுதலாக 2ஜிபி ரேம் கொண்ட உயர் வகையை பயன்படுத்துவதால், ஒன்பிளஸ் 5டி முதலிடத்தை பிடித்தது.

ஆனால் பிரிஸ்மா போன்ற சில அப்ளிகேஷன்கள், மற்ற மூன்றையும் விட ஹானர் வ்யூ 10-ல் வேகமாகச் செயல்பட்டன. மேற்கூறிய நான்கு ஃபோன்களிலும் ஒரு படத்தை திருத்தம் செய்ய முயன்ற போது, ஒரே நெட்வர்க்கில் இயக்கிய போதும் ஹானர் வ்யூ 10-ல் வேகமான தீர்வுகள் கிடைத்தன.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
ஹானர் வ்யூ 10 கேமிங் அனுபவம்

ஹானர் வ்யூ 10 கேமிங் அனுபவம்

கேம்களை ஏற்றம் செய்வதில் ஒன்பிளஸ் 5டி வென்று, ஹானர் வ்யூ 10-யை பின்னுக்கு தள்ளியது. ஆனால் கேம்கள் இயங்க ஆரம்பித்த பிறகு, இரண்டும் ஒரே வேகத்தில் இயங்கின. ஹானர் வ்யூ 10-ல் இன்கம்மிங் அழைப்புகள், பேட்டரி அளவு குறைவு மற்றும் அலாரம் ஆகியவை தவிர, வேறெந்த இடையூறு அறிவிப்புகளையும் கேம் ஆடும் போது திரையில் காட்டி தொந்தரவு செய்வதில்லை.

மேலும் நீங்கள் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் ஹானர் வ்யூ 10 மூலம் ஃபோனில் தான் சேமிக்கப்படுகின்றன. நெட்வர்க் உடன் தொடர்புடையதாக அல்ல என்பதால், மற்ற ஆண்ட்ராய்டு ஃபோன்களை விட இது அதிக பாதுகாப்பானது என்கிறது இதன் தயாரிப்பு நிறுவனம்.

இரட்டை லென்ஸ் கேமரா என்பது ஹூவாய்க்கு புதிதல்ல. ஆனால் ஹானர் வ்யூ 10-ல் செயற்கை நுண்ணறிவை கொண்டு செயல்படும் புதிய வகையான இரட்டை லென்ஸ் கேமரா காணப்படுகிறது. இதனுடன் என்பியூ இணைந்து ஒரு முக்கிய பங்காற்றி, ஒரு நிமிடத்திற்கு கிரின் 970 மூலம் 2 ஆயிரம் படங்களை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மாற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும், வேகமான கேமரா என்ற பெயரை ஹானர் வ்யூ 10 கைப்பற்றும் என்று தெரிகிறது.

ஆனால் மற்ற கேமராக்கள் உடன் வ்யூ 10-யை ஒப்பிட்டால், பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. படங்களை 100% விரிவுப்படுத்தும் போது, ஒன்பிளஸ் 5டி அதிகபட்ச விவரிக்கும் பண்பையும், எல்ஜி வி30+ குறைந்தபட்ச விவரிப்பையும் அளிக்கிறது. ஹானர் வ்யூ 10 இடைப்பட்ட பண்பைக் கொண்டுள்ளது.

ஓட்டுமொத்த படத்தின் தரம்

ஓட்டுமொத்த படத்தின் தரம்

ஹானர் வ்யூ 10-ல் 20எம்பி மோனோகிரோம் லென்ஸ் மற்றும் 16எம்பி ஆர்ஜிபி லென்ஸ் ஆகியவற்றை பெற்று, சூட்டிங்கின் போது தானியங்கி கேமரா அமைப்பின் மூலம் சிறந்த பட வெளியீட்டை அளிக்கிறது. ஒன்பிளஸ் 5டி கேமராவை விட, வ்யூ 10-ன் இரட்டை கேமராவின் மேக்ரோ போட்டோகிராஃபி சிறப்பாக உள்ளது.

சிறந்த விவரிப்பு மற்றும் கச்சிதமான நிறங்கள்

சிறந்த விவரிப்பு மற்றும் கச்சிதமான நிறங்கள்

ஒன்பிளஸ் 5டி-யை விட, இதில் எடுக்கப்படும் போக் ஷாட்கள் சிறப்பாக உள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் ஹானர் வ்யூ 10, ஒன்பிளஸ் 5டி-யை விட சிறப்பாகச் செயல்படுகிறது. இதில் உள்ள ஆர்டிஸ்ட் மோடு, மோனோகிரோம், நைட் மோடு, ப்ரோ மோடு உள்ளிட்டவற்றை நீங்கள் கட்டாயம் சோதித்து பார்க்க வேண்டியவை.

ஆனால் 20எம்பி பகுப்பாய்வில் வைத்தால், அதற்கு மேல் பெரிதுப்படுத்த முடியாது என்ற ஒரே ஒரு குறை மட்டும் இதற்கு உண்டு. பெரிதுப்படுத்த வேண்டுமானால், படம் எடுக்கும் போது 16எம்பி-யில் வைக்க வேண்டும்.

வோடாபோன் ரூ.509, ரூ.459 மற்றும் ரூ.348/-ல் அதிரடி திருத்தம்; நெருக்கடியில் ஏர்டெல்!வோடாபோன் ரூ.509, ரூ.459 மற்றும் ரூ.348/-ல் அதிரடி திருத்தம்; நெருக்கடியில் ஏர்டெல்!

13எம்பி முன்பக்க கேமராவிலும் போக் ஷாட்கள்

13எம்பி முன்பக்க கேமராவிலும் போக் ஷாட்கள்

செல்பீ எடுப்பதில் அதிக ஆர்வமுள்ள பயனர்களை, இதில் உள்ள 13எம்பி முன்பக்க கேமராவில் எடுக்கப்படும் படங்கள் கட்டாயம் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

மல்டிமீடியா அனுபவம்

மல்டிமீடியா அனுபவம்

ஹானர் வ்யூ 10-ல் 18:9 விகிதத்தில் அமைந்த 5.99 இன்ச் எல்சிடி திரையைப் பெற்று, 2160x1080பி பிக்சல்கள் பகுப்பாய்வு காணப்படுகிறது. ளிப்புறத்தில் சிறப்பாக தெரியும் வகையில், எல்சிடி திரை வெளிச்சமாக உள்ளது. இதிலுள்ள இஎம்யூஐ மூலம் நம் தேவைக்கு ஏற்ப திரையின் வெளிச்சத்தையும் நிறத்தையும் மாற்றிமைக்க முடியும் என்றாலும், ஒன்பிளஸ் 5டி-யின் திரையைப் போன்ற நேரடியான தன்மையை பெற முடிவதில்லை.

தோற்றம் மற்றும் உணர்வு

தோற்றம் மற்றும் உணர்வு

மெட்டல் மற்றம் கண்ணாடி மூலம் உருவாக்கப்பட்ட மெல்லிய அமைப்பை பெற்றுள்ள ஹானர் வ்யூ 10, பார்வைக்கு ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை கொண்ட ஸ்மார்ட்போனைப் போன்று காட்சி அளிக்கிறது.

கையில் எடைக்குறைவாக தெரிந்தாலும் வழுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இது கையில் இருந்து வழுக்காமல் இருக்க, சிலிக்கான் உறையை அளிக்கிறது.

இதன் அழகியல் தன்மையை ஆராய்ந்தால், வலதுபுறத்தில் பவர் பொத்தான் மற்றும் ஒலி சீரமைப்பு பொத்தான்களும் இடதுபுறத்தில் ஹைபிரிடு சிம் கார்டு அறை காணப்படுகிறது.

மேற்புறத்தில் மைக்ரோபோன் மற்றும் சார்ஜிங் போர்ட் உள்ளன. கீழ்புறத்தில் மைக்ரோபோன் மற்றும் தரமான 3.5மிமி ஹெட்போன் ஜெக் ஆகியவை உள்ளன. முகப்பு பொத்தானில் கைரேகை ஸ்கேனர் காணப்படுகிறது.

இஎம்யூஐ 8.0 அம்சம் எப்படி?

இஎம்யூஐ 8.0 அம்சம் எப்படி?

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ-வையும் மிஞ்சும் இஎம்யூஐ-யை, ஹானர் வ்யூ 10 கொண்டுள்ளது. ஆனால் மோட்டோரோலா, ஒன்பிளஸ், ஆப்பிள் அல்லது கூகுள் ஆகியவற்றை பயன்படுத்தி பழக்கம் கொண்டவர்களுக்கு, இஎம்யூஐ உடன் ஒத்து போக சற்றுநேரம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

இஎம்யூஐ-வை மாற்றிமைக்கும் தன்மை

இஎம்யூஐ-வை மாற்றிமைக்கும் தன்மை

இஎம்யூஐ சிறப்பாக மாற்றியமைக்க கூடிய வகையில் இருந்தாலும், இதில் ஏராளமான துணை பிரிவுகள் இருப்பதால், முதலில் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதன்படி, முகப்பு திரையின் வகையைத் தேர்ந்தெடுத்தல், திரையில் உள்ள இடமாற்றும் பொத்தான்களின் அமைப்பை மாற்றுதல் அல்லது அவற்றை முடக்கிவிட்டு, யூஐ முழுவதும் இடமாற்றம் செய்ய முகப்பு பொத்தானைப் பயன்படுத்தலாம். இதன் தீம் ஸ்டோரில் உள்ள 'அப் ட்வின்' மூலம் ஒரு அப்ளிகேஷனில் ஒரே நேரத்தில் இரு வேறு கணக்குகளில் உள்நுழைய முடியும்.

ஹானர் வ்யூ 10-ல் முகம் கண்டறியும் அம்சம் இருந்தாலும், இப்போதைக்கு அதை அறிவிப்புகளைப் படிக்கவும் திரையை லாக் செய்யவும் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. வ்யூ 10-க்கான மென்பொருள் புதுப்பிப்பு வரும் போது, முகம் கண்டறியும் அம்சத்தின் மூலம் அன்லாக் செய்யும் வசதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, ஹானர் வ்யூ ஃபோனின் மென்பொருளைப் பொறுத்த வரை, பல அம்சங்களை நிறைந்தது என்றாலும், ஆண்ட்ராய்டு ஃபோனின் முன் இது பயனருக்கு சுமூகமாக இருப்பதாக தெரியவில்லை.

பேட்டரி செயல்பாடு மற்றும் இணைப்பு திறன்

பேட்டரி செயல்பாடு மற்றும் இணைப்பு திறன்

இந்த ஸ்மார்ட்போனில் 3,750 எம்ஏஹெச் பேட்டரி இருப்பதால், நவீனகால அதிக பயன்பாட்டிற்கு ஏற்ப ஒரு நாள் முழுவதும் பேட்டரி தாக்குபிடிக்கிறது. மேலும் கிரின் 970 ஏஐ சிப்செட் குறைந்த ஆற்றலை மட்டுமே பயன்படுத்துகிறது.

இணைப்பு திறனைப் பொறுத்த வரை, ப்ளூடூத், வைஃபை, ஹைபிரிடு இரட்டை சிம் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை காணப்படுகிறது. இரு சிம் கார்டுகளில் உள்ள வோல்டி-யையும் ஆதரிக்கும் ஒரு சிறந்த அம்சத்தைப் பெற்றுள்ளது.

முடிவுரை

முடிவுரை

ஹானர் வ்யூ 10-யைக் குறித்து ஒரே வரியில் கூற வேண்டுமானால், விலையை வைத்து பார்த்தால் அதிக அம்சங்களைக் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எனலாம். மேலும் தற்போது சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களை விட வேகமாகவும் செயல்படுகிறது.

இந்த ஃபோனில் உல்ள ஏஐ, கேமரா, கேம்ஸ் ஆடுவது மற்றும் பிற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துதல் போன்ற நமது அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து, அதற்கேற்ப திறன்பட செயல்படுகிறது. சிறந்த கேமரா ஃபோனாக உள்ள இது, ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் சார்ஜை தக்கவைத்து கொள்கிறது.

அதே நேரத்தில் குறைந்த நேரடி தன்மையை அளிக்கும் எல்சிடி திரையையும், ஹூவாயின் சிக்கலான இஎம்யூஐ ஆகியவற்றை சகித்து கொள்ள நீங்கள் தயாரானால், ரூ.30 ஆயிரம் விலை பிரிவில் கிடைக்கும் ஒரு அட்டகாசமான ஃபோன் எனலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Honor View 10 is priced at Rs. The smartphone sports a taller 18:9 aspect ratio display. The smartphone features a 5.99-inch FHD+ screen that delivers a resolution of 2160x1080p pixels. It also has a capable dual-lens camera setup

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X