13எம்பி ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் ஹானர் வி9 பிளே.!
ஹானர் வி9 பிளே பொறுத்தவரை ஆக்டோ-கோர் மிடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
ஹானர் வி9 பிளே ஸ்மார்ட்போன் மாடல் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி சீன மொபைல் சந்தையில் வாங்க முடியும். மேலும் தங்கம், ரோஜா தங்கம், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ண விருப்பங்கள் கொண்டுள்ளது இந்த ஹானர் வி9 பிளே ஸ்மார்ட்போன்.
இந்த ஹானர் வி9 பிளே ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவரும் என அந்நிறுவம் கூறியுள்ளது.

ஆண்ட்ராய்டு :
ஹானர் வி9 பிளே பொறுத்தவரை ஆக்டோ-கோர் மிடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
ஹானர் வி9 பிளே பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications