டூயல் கேமராவுடன் வெளிவரும் ஹானர் வி9 மினி.!
ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் 4கே வீடியோபதிவு மற்றும் எல்இடி பிளாஷ் போன்றவை இவற்றுள் அடக்கம்.
ஹவாய் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹானர் வி9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, அதற்க்கு பிறகு இப்போது ஹானர் வி9 மினி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது ஹவாய் நிறுவனம். இந்த வருட இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு வந்த ஹானர் 8 ப்ரோ மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும் ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கைரேகை சென்சார் மற்றும் தனிப்பட்ட லோகோவுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா:
ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் 4கே வீடியோபதிவு மற்றும் எல்இடி பிளாஷ் போன்றவை இவற்றுள் அடக்கம்.

டிஸ்பிளே:
இந்த ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன் 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் (1440-2560)பிக்சல் தீர்மானம். மேலும் ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன் கொரில்லா கண்ணாடி மூலம் பாதுகாக்கப்படுகிறது.

ஆக்டோ-கோர்:
ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன், மேலும்ஆக்டோ-கோர் எஸ்ஒசி செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பேட்டரி:
இந்த ஹானர் வி9 மினி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி பவர் கொண்டுள்ளது. அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications