Honor V40 ப்ரோ மற்றும் Honor V40 ப்ரோ பிளஸ் டிசம்பரில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

|

ஹானர் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் ஹானர் வி 40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சீரிஸின் கீழ் ஹானர் வி 40 ப்ரோ மற்றும் வி 40 ப்ரோ பிளஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் தொடரின் விவரக்குறிப்புகள் மற்றும் ரெண்டர்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

புதிய ஹானர் வி 40 சீரிஸ்

புதிய ஹானர் வி 40 சீரிஸ்

டிவிட்டரில் டிப்ஸ்டர் ரோடென்ட்950 என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புதிய ஹானர் வி 40 சீரிஸ் வளைந்த கர்வுடு கிளாஸ் டிஸ்பிளேயுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் வி 40 சீரிஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புடன் ஹானர் பிராண்டின் பிராண்டிங் லோகோ வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் வலது புறம் பவர் சுவிட்ச் மற்றும் சவுண்ட் ராக்கர் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹானர் வி 40 ப்ரோ

ஹானர் வி 40 ப்ரோ

அடுத்த மாதம் வெளியாக ரெடியாகும் ஹானர் வி 40 சீரிஸில் பயனர்கள் 6.72' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். அதேபோல், ஹானர் வி 40 ப்ரோ சமீபத்திய கிரின் 9000 சிப்செட்டுடன் இயக்கப்படும் என்றும், ஹானர் வி 40 ப்ரோ பிளஸ் மஸார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட்டுடன் வரக்கூடும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!

ஹானர் வி 40 ப்ரோ பிளஸ் கேமரா

ஹானர் வி 40 ப்ரோ பிளஸ் கேமரா

கேமராக்களைப் பொறுத்தவரை, ஹானர் வி 40 ப்ரோ மூன்று கேமரா அமைப்போடு வரும் என்றும், ஹானர் வி 40 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்புடன் வரக்கூடும். இவை சோனி IMX700 RYYB 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்டதாக இருக்கும் என்றும், முன்பக்கத்தில் டூயல் செல்ஃபி கேமராவை எதிர்பார்க்கலாம் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது.

வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்

வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்

ஹானர் வி 40 சீரிஸ் 66W சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் வி 40 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கசிந்த சில அம்சங்களில், இந்த போன் 5 ஜி ஆதரவு, டூயல் சிம் அம்சம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் போன்ற அம்சங்களுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor V40 series expected to launch in December with this Leaked specification : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X