அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஹானர் வி40 லைட் அம்சங்கள் இதுதான்- 8ஜிபி ரேம், 64எம்பி கேமரா!
ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சமீப காலம் வெளியாக வந்த நிலையில், ஹானர் நிறுவனம் ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிவித்துள்ளது. ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 64 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு, டைமன்சிட்டி 800 யூ உடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன்
ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் கடந்த சில காலமாக கசிந்து வந்தது. இந்த நிலையில் ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 6.57 இன் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே 2340x1080 பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது.

6.57 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே
ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே 2340x1080 தீர்மானத்துடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட் உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, பச்சை மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு
ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எல்இடி ஃபிளாஷ் அம்சமும் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

3800 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் பேட்டரி
ஹானர் வி40 லைட் ஸ்மார்ட்போனில் 3800 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில் இது இரட்டை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1, வைஃபை, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடுவது போல் இது 5ஜி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி பிரதான கேமரா
ஹானர் வி40 5ஜி ஸ்மார்ட்போன் 6.72 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் உடன் வருகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ வி 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா, 2 எம்பி கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.
File Images


Click it and Unblock the Notifications